பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

187

£87

(இ - ள்) பிரம்மதேவன், திருமால் ஆகிய இவர்கள் தாம் தாம் தலைவர் என்று தமது அறியாமை காரணமாகக் கூறிக்கொண்டு இறைவனிடம் செல்ல, அதுபோது பரமன் அவர்கள் முன் அழல் பிழம்பாய் நின்றனன். அவர்கள் இருவரும் இறைவனது முடியையும் பாதத்தையும் தேடிக் காணப்பெருமல் கதறினர்கள்.

(அ- சொ) மால் - விஷ்ணு. பி ரா ன் - த ல்ே வன் . பேதைமை - அறியாமை. பரமன் - மேலான இறைவன். அனல் - தீ. அரற்றுகின்ருர் - கதறினர்.

(விளக்கம்) உயிர்களைப் படைப்பவன் பிரமன். படைத்த வற்றைக் காப்பவன் திருமால். படைக்காமல் காக்க முடியாமையால் படைக்கும் பிரமன் தானே தலைவன் என்றனன். படைத்தமை காக்கப்படாவிடின் பயன் இல்லை ஆதலின் திருமால் தானே தலைவன் என்றனன். இவ்விருவரும் தங்களுக்கு மேல் ஒரு தலைவன் உளன் என்பதை மறந்தனர். அதனுல்தான் தாங்களே பெரியவர் எனப் பேதைமையால் கூறத்தொடங்கினர். இந்த நிலை பில் இறைவன் தழல்பிழம் பாய் நின்று அடிமுடிதேடிக் காண்பவர் பெரியவர் என்று அசரீரியாக இருந்து கூறினன். உடனே திருமால் பன்றி வடிவுடன் இறைவன் திருவடி காணப் புறப்பட்டனன் பிரமன் முடி காண அன்னமாய்ப் பறந்தான். என்ருலும் கண்டிலர். அதனுல் கதறினர். இறைவன், மால் பிரமன் இருவரிலும் பெரியன் என்ற குறிப்புத் தோன்றவே பரமன் எனப்பட்டான்.

உலகப்படைப்பினை இறைவன் திருஅருளால் பிரமன் படைப்பான் 11. புவனம் படைப்பான் ஒருவன் ஒருத்தி

புவனம் படைப்பார்க்குப் புத்திரர் ஐவர் புவனம் படைப்பானும் பூமிசை யாய்ை புவனம் படைப்பான் அப் புண்ணியன் தானே.