பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190

196

இறைவனைக் கூடினன் என்ற வரலாறு உண்டு. பிறப்புத்

தொடர்ந்து வருதலின் அழகிய மாலை போன்ற பிறப்பு எனக் கூறப்பட்டது. மைந்தர் என்பது மைந்தார் என அமைந்தது.

இறைவனே உலகின் தலைவன்

114. தானே திசையொடு தேவரு மாய்கிற்கும் தானே உடல்உயிர் தத்துவ மாய்கிற்கும் தானே கடல்மலை ஆதியு மாய்கிற்கும் தானே உலகில் தலைவனும் ஆமே.

(இ - ள்) இறைவனேதான் திசைகளும், தேவரும், உடலும், உயிரும், அவனே உண்மைப் பொருளும், கடல், மலை முதலாகவும் இருந்து உலகிற்குத் தலைவன் என்பதை உணர்த்தி நிற்பவன்.

(அ - சொ) தத்துவம் - உண்மைப் பொருள். ஆதி முதலாக,

(விளக்கம்) உலகில் தோன்றும் பொருள்கள் அனைத்தும் இறைவனை அன்றி வேறு இல்லை என்பது ஈண்டு விளக்கப் படுகிறது.

எங்கும் தானுகி இருப்பவன் இறைவன் 115. உடலாய் உயிராய் உலகம தாகிக்

கடலாய்க் கார்முகில் நீர்பொழி வானுய் இடையாய் உலப்பிலி எங்கும்தான் ஆகி அடையார் பெருவழி அண்ணல்கின் ருனே. (இ - ள்) உடலாகவும், உயிராகவும், உலகமாகவும், கடலாகவும், கரிய மேகமாகவும், நீரைச் சொறியும் ஆகாய மாகவும், இவற்றின் உள் உறைபவனுமாயும் அழியாமல் நின்று எங்கும் தானகிப் பற்றுதற்குறிய பொருளாகப் பெருவழியாக இறைவன் இருக்கின்றன்.