பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

191

191

(அ - சொ) கார் . கரிய. முகில் - மேகம். வான் . ஆகாயம். இடையாய் - உள்ளே தங்கியிருக்கும் பொருளாகி. உலப்பு - அழிவு. அடை ஆர் - அடைதற்குப் பொருந்திய, அண்ணல் - பெருமையின் சிறந்த சிவன்.

(விளக்கம்) இறைவன் உயிருக்கு உயிராய் உடலுக்குள் தங்கி இருப்பவன் ஆதலின், அக்கருத்தை அடிக்கடி ஆசிரியர் கூறி வருகிரு.ர். இறைவன் ஒருவனே அழிவில்லாதவன் ஆதலின் அவன் உலப்பிலி ஆவான்.

திருமாலாய் இருப்பானும் சிவனே

116. தாளுெரு காலம் தனிச்சுட ராய்கிற்கும்

தானுெரு கால்சண்ட மாருத மாய்கிற்கும் தானுெரு காலம் தனிமழையாய் நிற்கும் தானுெரு காலம்தண் மாயனும் ஆமே. (இ ஸ்) இறைவனும் சிவன் ஒவ்வொரு சமயமும் ஒப்பற்ற சூரிய சந்திரளுகவும், பெருங்காற்ருகவும், குளிர்ந்த மழையாகவும் திருமாலாகவும் நிற்பான்.

(அ - சொ) தனி - ஒப்பற்ற, சுடர் - சந்திர சூரியர். சண்ட மாருதம் - பெருங்காற்று. தண்மழை - குளிர்ந்தமழை. மாயன். திருமால்.

(விளக்கம்) இறைவன் துணையின்றி, சந்திர சூரியர் ஒளி யினைத் தர மாட்டார். மழையும் நீரைப் பொழியாது. திருமாலும் காக்கும் தொழிலை நடத்தமுடியாது.

அங்கியே ஈசனுக்கு அம்பாகும். 117. அங்கிசெய் தீசன் அகலிடம் சுட்டது அங்கிசெய் தீசன் அலைகடல் சுட்டது அங்கிசெய் தீசன் அசுரரைச் சுட்டது அங்கிஅவ் ஈசற்குக் கைஅம்பு தானே.