பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196

196

ஆண், பெண் அலியாகப் பிறக்கக் காரணம் 123. ஆண்மிகில் ஆண் ஆகும் பெண்மிகில் பெண் ஆகும் பூண் இரண் டொத்துப் பொருந்தில் அலிஆகும் தாண்மிகும் ஆகில் தரணி முழுதாளும் ஆண்வசம் மிக்கிடில் பாய்ந்ததும் இல்லையே. (இ) - ள்) ஆண்மகனிடம் தோன்றும் சுக்கில மிகுதி யானுல் ஆண் குழவி பிறக்கும். பெண்களிடம் தோன்றும் சுரோணிதம் மிகுதியானல் பெண் மகவு பிறக்கும். இவ் விரண்டாகிய சுக்கில சுரோணிதமும் சமமாக இருப்பின் அலியாகக் குழந்தை பிறக்கும். ஆண் மகனின் முயற்சி மிகுதியாகப் புணர்ச்சியில் காணப்பட்டால், உலகம் முழுதும் அரசுசெய்யும் ஆண் மகன் பிறந்து, ஆண்மை யுடையவன் ஆவான். ஆனல் சுக்கிலம் மிக்க சுரோணித மாயின் சுக்கிலம் கருவுள் பாய்வதில்லை. ஆகவே கரு உற்பத்தி இல்லை; பயன் இன்றிப் போகும். -

(அ - சொ) ஆண் - ஆணிடத்துத் தோன்றும் சுக்கிலம். பெண் - பெண்ணிடத்துத் தோன்றும் சுரோணிதம். தாள் - முயற்சி.

(விளக்கம்) தாண் (தாள்) மிகுதலாவது ஆண்மகனது சுக்கிலம் தன் முயற்சியினல் அளவில் மிகக்கூடுதல். ஆண்மிகில் என்பதற்கும் இதற்கும் வேறுபாடு யாது எனில், அஃது அளவுடன் மிகுவது, இஃது அளவிற்குமேல் மிகுவது. இப்படி மிகுத்தும் குறைத்தும் விடக்கூடிய வன்மை பிராணயாமப் பயிற்சியுடையாருக்கே இயலும். சுரோணிதம் மிக்க போது பாயும் சுக்கிலம் பயன் அற்றுப்போகும் என்பது ஈற்றடிக் கருத்து. - -

பிறக்கும் குழந்தையின் ஆயுளை அறியும் விதம் 124. பாய்ந்தபின் அஞ்சோடில் ஆயுளும் நூருகும் பாய்ந்தபின் கால்ஓடில் பாரினில் எண்பதாம் பாய்ந்திடும் வாயுப் பகுத்தறிந் திவ்வகை பாய்ந்திடும் யோகிக்குப் பாய்ச்சலும் ஆமே.