பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

199

199

குழந்தை அங்க ஈனமாகப் பிறக்கக்காரணம்

127. பாய்கின்ற வாயு குறையில் குறள் ஆகும்

பாய்கின்ற வாயு இளைக்கின் முடம்ஆகும் பாய்கின்ற வாயு நடுப்படின் கூன்ஆகும் பாய்கின்ற வாயுமா தர்க்கில்லே பார்க்கிலே. இ - ள்) கருப்பையில் பாயும் வாயு நான்கு மாத்திரை அளவு குற்ைந்தால் குழந்தை குள்ளமாகப் பிறக்கும். வாயு இளக்குமானல், கைகுறை கால்குறை முதலான உறுப்புக் குறைவுடன் குழந்தை பிறக்கும். வாயு சிறிது தடைப்படின் கூகைப் பிறக்கும். இங்குக் கூறிய வாயு ஆண் மகனுடை யதே அன்றிப் பெண்ணுடையதன்று.

(அ - சொ) குறள் - குட்டை வடிவு. முடம் உறுப்புக் குறை. நடு தடை _4

(விளக்கம்) ஈண்டுக் குறைதலும் இளைத்தலும் ஆண் மக னுடைய சுக்கிலத்துடன் கூடிய வாயுவே ஆகும்.

குழந்தை ஊமை குருடு ஆதற்குக் காரணம் 132. மாதா உதாம் மலம்மிகின் மந்தனும்

மாதா உதரம் சலம்மிகின் மூங்கையாம் மாதா உதரம் இரண்டொக்கில் கண்இல்லை மாதா உதரத்தில் வந்த குழவிக்கே. (இ - ள்) தாயின் வயிற்றில் மலம் மிகுமானல் கரு விடை வந்த குழந்தை மந்தமாக இருக்கும். நீர் மிகுந் திருக்குமானல் ஊமையாகப் பிறக்கும். மலமும் சலமும் மிகுந்திருந்தால் கண்ணின்றிப் பிறக்கும்.

(அ - சொ) உதரம் - வயிறு, மந்தம் - சுறுசுறுப்பற்ற நிலை. மூங்கை ஊமை. இரண்டு மலம் சலம். .

(விளக்கம்) தாய் புணர்ச்சியின்போது மலம், சலம் மிகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது. - - -