பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204

304

தவத்தால் இறைவனே அறியலாம்

135. ஏனுேர் பெருமையன் ஆகிலும் எம்இறை

ஊனே சிறுமையுள் உட்கலங் தங்குளன் வாளுேர் அறியும் அளவல்லன் மாதேவன் தானே அறியும் தவத்தினின் உள்ளே.

(இ - ள்) ஏனைய தேவர்களைக் காட்டிலும் எங்கள்.சிவ பெருமான் பெருமையில் மிக்கவன். ஆனாலும், உடலுக்குள் அணுவுக்கும் அணுவாயுள்ள உயிராய் உட்கலந்துள்ளான். அந்த மகாதேவன் தேவர்களாலும் அறியும் தன்மையன் அல்லன்; தவத்தால்தான் அறியப்படக் கூடியவன்.

(அ - சொ) இறை - தலைவன்; (சிவன்). ஊன் - தசையால் ஆன உடம்பு. வானேர் - தேவர். மா- பெரிய

(விளக்கம்) பெருமைக்கு உரியவன் சிவனே ஆவன். ஏனைய தேவர்களின் பெருமை உபசாரமே அன்றி உண்மை அன்று. உயிர் அணுவினும் சிறியது; ஆதலின் சிறுமை எனப்பட்டது. இறைவன் தேவர்களால் அறியப்படாதவன் என்ருலும், அவன் தவசிகளால் அறியப்படுபவன் ஆவன்.

சிவன் சக்தி செய்யும் தொழில்

136. சக்தி சிவன்விளை யாட்டால் உயிராக்கி

ஒத்த இருமாயா கூட்டத் திடையூட்டிச் சுத்தம தாகும் துரியம் பிரிவித்துச் சித்தம் புகுந்து சிவமயம் ஆக்குமே.

(இ - ள்) சத்தியும் சிவமும் விளையாட்டாகவே உயிர் களை உடலில் புகுத்திச் சுத்த மாயை அசுத்த மாயைகளே யும் சேர்த்து அனுபவிக்கச் செய்து துரியாவத்தையும் நீக்கி ஆன்மாவின் உள்ளத்தில் என்றும் பிரிக்கமுடியா நிலையில் விளங்கி அவ்வான்மாவைச் சிவமாக்குவர். -