பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

205

265

(அ - ச்ொ) இருமாயா - சுத்த மாயை, அசுத்த மாயை. துரியம் - பேர் உறக்கம். ஊட்டி - அனுபவிக்கச்செய்து.

(விளக்கம்) இறைவன் இறைவி உயிர்கட்கு உடல் ஈவது அவர்கட்கு ஆயாசம் அன்று: அஃது ஒரு விளையாட்டே. அது விளையாட்டே ஆயினும், உயிரினப்பற்றி நின்ற பாசங்களை ஒழிப்பதற்கே ஆகும். அச்செயல் அவர்தம் கருணையே ஆகும். சுத்தமாயை என்பது மல கன்மங்களுடன் கூடாதது. அசுத்த மாயை என்பது மலகன்மங்களுடன் கூடியது. ஊட்டி என்பது வினைப்பயன்களை அனுபவிக்கச் செய்தல் என்பதாம்.

மூவகை மாக்களும் அவர்களின் வகைளும்

137. விஞ்ஞானர் கால்வரும் மெய்ப்பிரள பாகலத் தஞ்ஞானர் மூவரும் தாங்கு சகலத்தின் அஞ்ஞானர் மூவரும் ஆகும் பதின்மராம் விஞ்ஞானர் ஆதிகள் வேற்றுமை தானே.

(இ - ள்) விஞ்ஞானகலர் முதலிய உயிர்வகைகளின் வேறுபாடுகள் எவை எனில், விஞ்ஞானகலர் நால்வர், பிரளயாகலர் மூவர், சகலர் மூவர், ஆகப் பதின்மராம்.

(அ சொ) மெய் - உண்மையில். அஞ்ஞானர் - அஞ்ஞானி கள். சகலம் - சகலர். பதின்மர் - பத்துப்பேர். ஆதிகள் . முதலியவர். விஞ்ஞான ராதிகள் விஞ்ஞானகலர், பிரளயாகலர் சகலர் என்போர். வேற்றுமை - வேறுபாடு.

(விளக்கம்) விஞ்ஞானகலர் என்போர் விஞ்ஞானத்தாலே கலையை உணர்ந்தவர்கள். இவர்கட்கு ஆணவமலம் ஒன்றே உண்டு. இவர்கட்கு இறைவனே உள்நின்று உபதேசித்து ஆணவ மலக்கட்டை அறுப்பன். இவர்கள் நால்வர் ஆவர். பிரளயாகலர் என்பவர் ஆணவம் கன்மம் ஆகிய இருமலங்களை உடையவர். இவர்கள் பெருமானே முன்நின்று திருநோக்கால் பரிசித்து உரையால் உபதேசம் செய்யும் பேறும் பெறக்