பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

207

807

(இ - ள்) மக்கள் தம் கண்முன் இயமன் உயிர்களைக் கொண்டு போவதைக் காண்கிரு.ர்கள். அதேசமயத்தில் தம் உள்ளத்தில் இறைவன் குடிகொண்டிருத்தலையும் அறிகிருர்கள். அப்படி இருந்தும், நன்ருக அறிந்த ஞானி கட்குத் திருவருள் புரியும் தலைவனைத் சில தேவரே அறிந் தார்கள்.

(அ - சொ) காலன் - இயமன். குணத்தன் - இறைவன். உயிர்கொள்ளும் - உள்ளத்தில் வீற்றிருக்கும்.

(விளக்கம்) இறைவன் உள்ளத்திலிருந்தும், அவனை உணராது, வீணே இயமனுக்கு உயிரை ஈந்து அழிகின்றனரே என்று இரக்கத்துடன் கூறினர். இறைவனைக் குணத்தன் என்றது நன்று அறிந்தார்க்கு அருள் செய்வதனல் ஆகும். காலம் அறிந்து உயிர்களை இயமன் கொண்டு செல்லுதலின் காலன் எனப்பட்டன.

சீலம் இலார்க்கு ஈதலில் சிறிதும் பயன் இல்லை 140. கோல வறட்டைக் குனிந்து குளகிட்டுப் பாலைக் கறந்து பருகுவ தேஒக்கும் சீலமும் நோன்பும் இலாதவர்க் கீந்தது காலம் கழிந்த பயிரது ஆகுமே. (இ - ள்) ஒழுக்கமும் நோம்பும் இல்லார்க்கு ஒன்றை ஈவது, அழகான வறட்டுப் பசுவிற்குக் குனிந்து பசுந்தழை களே இட்டுப் பாலேக் கறந்து குடிப்பது போலாகும். இது போன்றது மட்டும் அன்று பருவம் தவறிச்செய்த பயிரை யும் போன்றதாகும்.

(அ - சொ) கோலம் - அழகு. வறட்டு - பால்கொடாத வறட்டுப்பசு. குளகு - பசுந்தழை, சீலம் - ஒழுக்கம். நோன்பு . விரதம்: தவம். - - -

(விளக்கம்) தகுதியற்ற ஞானிகட்கு ஒன்றை ஈவதால் பயன் இல்லை என்பதை இரண்டு உதாரணங்களால் விளக்கினர். பசு அழகாக இருக்கிறது. அதற்குப் பசுந்தழை