பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208

208

களையும் இடுகிருேம். ஆனல் பால்மட்டும் தராது. இவ்வளவும் செய்வதில் பயன் யாது? அப்படியே பருவகாலத்தில் பயிர் செய்ய வேண்டும். பருவம் தவறிப் பயிர் செய்யின் பயன் உண்டோ? இவ்வாறேதான் நோன்பு சீலம் இல்லா ஞானிகட்கு ஈவதும் ஆகும். பருகுவதே ஒக்கும் என்பது, பருகமுடியாது என்ற பொருளைக் குறிப்பால் உணர்த்துகிறது.

யோகம் நியமம் இல்லார்க்கு ஈதல் தவறு 14. ஈவது யோக இயம நியமங்கள்

சார்வது அறிந்தன்பு தங்கும் அவர்க்கன்றி ஆவ தறிந்தன்பு தங்கா தவர்களுக்கு ஈவது பெரும்பிழை என்றுகொள் வீரே. (இ - ள்) உலகீரே, யோக உறுப்புக்களான இயம நியமங்களின் சார்புகளை உணர்ந்து அன்பு தங்கப்பெற்றவர் களுக்கே அல்லாமல், அன்பில்லாதவர்கட்கு ஒன்றைத் தருவது பெரும் தவருகும் என்பதை அறிந்து கொள்ளுங் கள்.

(அ - சொ) யோகம் - தியான நிஷ்டை. இயமம் - தீமை அகற்றல். நியமம் - நன்மை ஆற்றல்.

(விளக்கம்) பாத்திரம் அறிந்து பிச்சை இடுதல் வேண்டும், என்பதை இம்மந்திரம் கூறுகிறது. இயமமாவது கொலே, களவு, பொய், காமம், முதலான தீய குணங்களை அகற்றி ஐம்புலனை அடக்கி இருத்தலாகும்.

ஞானிக்கு ஈந்தவன் நரகம் புகான்.

142. ஆமா றறியான் அதிபஞ்ச பாதகன்

தோமாறும் ஈசற்கும் தூய குரவற்கும் காமாதி விட்டோர்க்கும் தரல்தந்து கற்பிப்போன் போமா நரகில் புகான்போதம் கற்கவே.