பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

209

209

(இ - ள்) ஐந்து வகையான பெரும்பழிகளின் ஈடு பாட்டை அறியாதவளுய்க் குற்றத்தில் இருந்து நீங்கிய இறைவனுக்கும், பரிசுத்தமான ஆசாரியனுக்கும், காம முதலானவற்றை நீங்கினவர்க்கும் கொடுத்து, இவ்வாறு தான் ஆகொடுப்பது போலப் பிறரையும் கொடுக்குமாறு கற்பிப்போன் பெரிய நரகத்தில் புகான். இத்தகையவன் என்றும் சிவஞானமே கற்பாளுக, -----.

(அ - சொ) அதி பெரிய தோம் - குற்றம். துரிய - பரிசுத்தமான குரவர் - ஞானசிரியர். மா- பெரிய போதம் - சிவன் உணர்வு; இதுவே சிவஞானம் ஆகும்.

(விளக்கம்) பஞ்சமாபாதகங்கள் என்பன பொய், கொலை, களவு, கள், காமம் என்பன மாறும் எனப் பிரிக்கவும். காமாதி என்பவை காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் என்பன. மாச்சரியம் என்பது பொருமை. -

இறைவனை ஏத்தாத ஞானியும் அந்த ஞானிக்கு ஈந்தவனும் நரகம் புகுவர் 143. மண்மலை அத்தனை மாதனம் ஈயினும்

அண்ணல் இவன்என்று அஞ்சலி யத்தணுய் எண்ணி இறைஞ்சாதார்க்கு ஈந்த இருவரும் கண்ணுவர் ஏழாம் நரகக் குழியிலே. (இ - ள்) மண் அளவேனும் மலையளவேனும் பெரும் பொருளை இவனே எல்லாரினினும் பெருமையில் சிறந்தவன் என்று இரு கைகளையும் தலைமேல் குவித்து வணங்கி, இறைவனே உள்ளத்தில் தியானம் செய்யாதவருக்குக் கொடுத்தவனும், கொடுக்க ஏற்ற இறை உணர்வு இல்லாத வனும் ஏழ் நரகக் குழியில் சேர்வர். -

(அ- சொ) மா - பெரிய தனம் - பொருள். அண்ணல் பெருமையில் சிறந்தவர். அஞ்சலியத்தன் இருகரங்களைக்

த,-14 -