பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

211

2?i

இருந்த இடத்தில் உள்ள சிவலிங்கத்தை வேருேர் இடத்தில் வைத்தல் கூடாது 145. தாவர லிங்கம் பறித்தொன்றில் தாபித்தால் ஆவதன் முன்னே அரசு கிலேகெடும் சாவதன் முன்னே பெருநோய் அடுத்திடும் காவலன்பேர் கந்தி கட்டுரைத் தானே.

(இ - ள்) நிலைபெற்றிருந்த சிவலிங்கத்தை அவ்விடத் திலிருந்து பெயர்த்து வேருேர் இடத்து வைத்துத்தாபித்து அந்த இடத்தில் வேறு ஒர் உருவை அமைத்தால், இந் நிகழ்ச்சி நிகழ்வதற்கு முன்பே அரசு நிலைகுலையும். எடுத்து அப்புறப்படுத்தியவன் இறப்பதற்கு முன்பு, குஷ்ட நோயால் துன்புறுவன். இந்த உண்மையினே எல்லா உயிர்களையும் காக்கும் குருநாதன் எடுத்துரைத்துள்ளான்.

(அ - சொ) தாவரம் - நிலைபெறுத்தப் பெற்ற பெரு நோய் - குஷ்டநோய். காவலன் - இறைவன்.

(விளக்கம்) இறைவன் யாண்டுத் திருவுருக்கொண்டு இட மாக உள்ளானே, ஆண்டிருந்து அவனைப் பெயர்த்து வேறு இடத்தில் அமைக்கவும் ஒண்ணுது. அவ்விடத்தில் வேறு ஒரு வடிவையும் அமைக்கவும் கூடாது. அப்படிச் செய்தால் பெருந் தீங்குகள் விளையும். -

கோயிலுக்கு யாதொரு தீங்கும் இழைத்தல் கூடாது

146. கட்டுவித் தார்மதில் கல்ஒன்று வாங்கிடில் வெட்டுவிக் கும்.அபி டேகத் தரசரை முட்டுவிக் கும்முனி வேதியர் ஆயினும் வெட்டுவித் தேவிடும் விண்ணவன் ஆணையே. (இ - ள்) அன்பர்கள் கோவிலைக் கட்டுவர். அக்

கோயிலின் மதிலிலிருந்து ஒரு கல்லை எவர் பிடுங்கி

விட்டாலும், மகுடாபிஷேகம் செய்து கொண்ட அரசரை