பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212

212

அறக்கடவுள் அழிக்கும். முனிவர்களானலும், வேதியர் களானலும், இக்காரியத்தைச் செய்தால் அவர்கட்கும் பெருந்தீங்கு உண்டாகுமாறு செய்யும். இஃது இறைவனே கட்டளே ஆகும்.

(அ - சொ) அபிடேகம் - மகுடாபிஷேகம். முட்டுவிக்கும் - துன்பம் உறச்செய்யும். வெட்டுவிக்கும் - அழிக்கும்.

(விளக்கம்) அரசன் அழிவான் என்றதால் பாதகம் செய்தோன் அழிவான் என்பது உறுதி ஆயிற்று. அரசன் எவ்வழி (அவ்வழி குடிகள் ஆதலாலும், அரசனையே உலகம் உயிராகக் கொண்டிருத்தலினலும், குடிமக்கள் செய்யும் தீங்கு அரசனைச் சார்ந்திடும். ஆகவே, அவன் அழிவையே கூறினர். முனிவர்கள், தேவர்கள் தாம் எது செய்யினும் எதுவும் ஒன்றும் செய்யாது என்ற எண்ணம் கொண்டவர். ஆதலின் அவர்களும் கோவிலுக்கு இம்மி அளவு தீங்கு செய்யினும் அழிவர் என்பது ஈண்டுக் கூறப்பட்டது. .

பூசை தவறில் தீங்கு விளையும் 14.7. ஆற்றரும் நோய்மிக் கவனி மழைஇன்றிப்

போற்றரும் மன்னரும் போர்வலி குன்றுவர் கூற்றுதைத் தான்திருக் கோயில்கள் எல்லாம் சாற்றிய பூசைகள் தப்பிடில் தானே. - (இ - ள்) மார்க்கண்டேயரின் பொருட்டு இயமன உதைத்த இறைவனது சிறந்த கோயில்களில் எல்லாம், ஆகமத்தில் சொல்லியுள்ள முறைப்படி பூசைகள் நடை பெறுவது தவறினால், உலகில் சகிக்கமுடியாத நோய் மிகுந்து மழை இல்லாமல் பஞ்சம் ஏற்படும். போற்றுதற்கு அருமையான அரசர்களும் தம் போர்வன்மை குறைந்து போவர்.

(அ சொ) கூற்று - இயமன். உதைத்தான் - உதைத்த, இறைவன். திரு - அழகிய சாற்றிய கூறியுள்ள ஆற்றரும் - பொறுக்க முடியாத அவனி - பூமி,