பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

213

2.13

(விளக்கம்) மார்க்கண்டேய முனிவர் தமக்குப் பதிருைவது வயதில் இறப்புநேரிடும் என்று அறிந்து, அதனைப் போக்கச் சிவலிங்க பூசை புரிந்தனர். இயமன் தன் கடமைப்படி மார்க் கண்டேயர் உயிரைக் கொண்டுசெல்லத் தனது பாசக்கயிற்றை அவர்மீது வீசினன். அதுபோது சிவலிங்கத்திலிருந்து ஈசன் தோன்றி, இயமன உதைத்துத்தள்ளி, மார்க்கண்டேயர் என்றும் பதினறு வயதுடன் இருக்க அருள் புரிந்தான். இந்த வரலாற்றைக் கொண்டதே கூற்றையுதைத்தான் என்னும் தொடர்.

பூசை தவறின் மேலும் நிகழ்வன இவை எனல்

148. முன்னவ ஞர்கோயில் பூசைகள் முட்டிடின் மன்னர்க்குத் தீங்குள வாரி வளங்குன்றும் கன்னம் களவு மிகுத்திடும் காசினி என்னரும் நந்தி எடுத்துரைத் தானே.

(இ. ள்) எல்லார்க்கும் எப்பொருட்கும் முன்னவளுய் உள்ள இறைவனம் பரசிவப் பெருமானின் கோயில் பூசைகள் தடைப்படின், உலகில் அரசர்கட்குத் தீங்குகள் பலவாகும். மழையின் வளம் குறையும். கன்னக்கோல் கொண்டு செய்யும் திருட்டு மிகும். இவ்வாறு குருநாதன் எடுத்து மொழிந்துள்ளான்.

(அ - சொ) முன்னவளுர் . இறைவர்ை. வாரி - மழை அல்லது வருவாய். காசினி - பூமி, நந்தி - குருநாதன்.

(விளக்கம்) மேலே கூறிய மந்திரத்தின் பொருளையே மீண்டும். இம்மந்திரத்தில் எடுத்துக் கூறிக் கோயில் பூசை தடைபடுதல் கூடாது என்பதை வற்புறுத்திப் பேசுகிரு.ர். இக் கருத்துக்கள் தம் கருத்துக்கள் அல்ல; குருநாதன் கருத்து என்று கூறி இருப்பதை உணர்தல் வேண்டும்.