பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214

பார்ப்பார் எல்லாம் பூசைக்குரியர் ஆகார்

149. பேர்கொண்ட பார்ப்பான் பிரான்தன்னை அர்ச்சித்தால்

போர்கொண்ட வேந்தர்க்குப் பொல்லா வியாதியாம்

பார்கொண்ட நாட்டுக்குப் பஞ்சமும் ஆம் என்றே

சீர்கொண்ட நந்தி தெரிந்துரைத் தானே.

(இ - ள்) பெயர் அளவில் பிராம்மணன்' என்று சொல்லிக் கொண்டு, சிவதீட்சை, ஆகம நூல் அறிவு, பிறப்பு ஒழுக்கம் முதலானவை இன்றி, இறைவனைப் பூசிப் பானாயின், போரினை மேற்கொள்ள வல்ல மன்னனுக்குத் தீயநோய்கள் உண்டாகும். நாட்டிலும் பஞ்சம் ஏற்படும். இவ்வாறெல்லாம் உண்டாகும் என்று உரைத்தவன் சிறப் புடைய நந்தியாகிய குருநாதனே ஆவான்.

(அ - சொ) அர்ச்சித்தல் - பூசனை செய்தல். பார் - பூமி.

(விளக்கம்) பிறப்பினால் மட்டும் உயர்ந்தவர் என்று கூறல் கூடாது. பிறப்புக்கு ஏற்ற ஒழுக்கம் இருத்தல் வேண்டும். பிராம்மணராக மட்டும் பிறந்த காரணத்தால் இறைவன் பூசை நடத்தற்கு அருகர் ஆகார். அவர்கள் அர்ச்சகராகவரின் ஆகம அறிவு, சிவ தீட்சை முதலானவற்றைப் பெற்றிருக்க வேண்டும்.

உண்மையைக் கூறினால் உயர்வு கிட்டும் 150. செய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப் பொய்யே உரைத்துப் புகழும் மனிதர்கள் மெய்யே உரைக்கில் விண்ணோர் தொழச்செய்வன் மைதாழ்ந்திலங்கும் மிடறுடை யோனே.

(இ - ள்) செழுமையான கடல் சூழ்ந்த உலகில் எல்லாவற்றையும் அறிவான் உலகம் படைத்த இறைவன். ஆதலால் பொய்யே பேசித் திரியும் மனிதர்களே, நீங்கள் உண்மையினை உணர்ந்து உரைப்பின் விண்ணுலகத்தவரும் வணங்குமாறு செய்வான் கருமை குறைந்து விளங்கும் கழுத்துடைய(வனாகிய சிவன்)அவன்.விண்ணுலகத்தவரும் வணங்குமாறு செய்வான் கருமை குறைந்து விளங்கும் கழுத்துடைய(வனாகிய சிவன்)அவன்