பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216

盛霹

(விளக்கம்) பிறமதத்தர் இறைவனது அருமை பெருமை உணராமல், அவனை இகழ்ந்து பேசுகின்றனர். அவர்கள் அழிவது நிச்சயம். இதையே உவமை வாயிலாக விளக்கினர். பூனையினுல் கிளி கிழிக்கப்பட்டு அழிவதுபோல இகழ்வோர் அழிவர் என்பதாம்.

ஆதிப்பிரான அறிபவர் ஆர் எனல்

152 முளிந்தவர் வானவர் தானவர் எல்லாம்

விளித்தவர் மெய்ங்கின்ற ஞானம் உணரார் அளித்தமு தூறிய ஆதிப் பிராணத் தளிந்தவர்க் கல்லது தாங்கஒண் ணுதே.

(இ - ள்) வாடிய உடலினரான தேவர்கள் அரக்கர்கள் முதலான யாவரும், உண்மையான சிவஞானம் உணராத வர்கள். ஆதலின், இறந்தவர்க்கு ஒப்பாவர். ஆகவே, இறைவனைக் காண இயலாது. ஆல்ை உள்ளம் கனிந்த சிவஞானம் உணரப் பெற்ற அடங்கிய மெய்ஞ்ஞானிகளால் தாம் கனி என அளிந்த கண்ணுதல் பரமனைக் காண முடியும். அவனே உள்ளத்தில் தாங்கவும் முடியும்.

(அ - சொ) முளிந்தவர் - வாடியவர். வானவர் . தேவர். தானவர் - அரக்கர். விளிந்தவர் - இறந்தவர். மெய்ந்நின்ற ஞானம் - தத்துவ ஞானம். தளிந்தவர் - அடங்கியவர்.

(விளக்கம்) வினைபோல் போகாதி இன்பங்களில் தேவர் களும் அசுரர்களும் ஈடுபடுதலின், அவர்கள் உடல் வாடுதற்குக் காரணமாகிறது. அதனுல் அவர்கள் மெய்ஞ்ஞானமாகிய சிவஞானத்தை எய்தப் பெற்றிலர். ஆகவே, இறைவனை அடையும் வாய்ப்பும் பெற்றிலர். ஐம்புலன் அடக்கியவர் சிவஞானம் கைவர்ப் பெற்றவர். ஆதலின், இறைவனை அடைவர்; அவனை அறியவும் அறிவர்.