பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

221

221

அடியாரை இகழ்ந்தவர் நரகில் வீழ்வர் 153. ஆண்டான் அடியவர் ஆர்க்கும் விரோதிகள்

ஆண்டான் அடியவர் ஐயம்ஏற் றுண்பவர் ஆண்டான் அடிவாரை வேண்டாது பேசினுேர் தாந்தாம் விழுவது தாழ்நர காகுமே. (இ - ள்) உயிர்களை அடிமை கொண்டு ஆளும் இறை வனது அடியவர்கள் எவர்க்கும் விரோதிகள் ஆவார்: அவர்கள் பிச்சை எடுத்து உண்பவர். இத்தகையவர்களை யார் விரும்பாமல் இழிவாகப் பேசுகின்ருர்களோ அவர்கள் தாழ்வான நரகில் வீழ்வர். - (அ - சொ) ஐயம்-பிச்சை. (விளக்கம்) உயிர்கள் அடிமைகள். அடிமைகளை இறை வன் ஆட்கொள்ளுகிருன். அதனால் அவன் ஆண்டான் ஆயினன். அடியவர்கள் உலகமக்களுடன் வேறுபட்டுப் பித்தர், பிசாசுபோல இருத்தலின், உலகவர்க்கு விரோதிகள் ஆகின்றனர். அடியவர்களை விரும்புவோர் சிலராகவும், பழிப்போர் பகைப்போர் பலராகவும் இருத்தலின், மிகுதி பற்றி ஆர்க்கும் என்றனர்.

தன்னை வணங்குபவரை ஈசன் கல்லார் என்பன் 160. ஒலக்கம் சூழ்ந்த உலப்பிலி தேவர்கள்

பாலொத்த மேனியன் பாதம் பணிந்துய்ய மாலுக்கும் ஆதிப் பிரமற்கும் மன்னவன் ஞாலத் திவர்மிக நல்லர்.என் ருனே. (இ - ள்) இறைவன் திருமாலுக்கும் பிரமனுக்கும் தலைவன்; பால்போலும் திருமேனியுடையவன். அவன் திருவோலக்கம் கொண்டிருக்கும் போது, எல்லையற்ற தேவர்கள் அவனது திருவடிகளைப் பணிந்து ஈடேறுவர். அத்தகையவர்களைக் கண்டு இறைவன் இவர்கள் உலகில் மிக நல்லவர்கள் என்று பாராட்டுவன்.