பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

223

纥

(இ) - ள்) எல்லா உயிர்களையும் அடிமையாக உடைய எல்லாம் உடைய இறைவனது அடியார்களின் அடியார் களுடன் சென்று, மழுவாயுதம் கொண்ட தீப்போலும் நிறம்பெற்ற சரீரத்தையுடைய இறைவன்முன் சென்றேன். கடைகாப்பாளர் இறைவன் முன் என்னைப் பற்றிக் கூற இறைவனும் வருக எனக் கருணையுடன் மொழிந்தான். அதுபோது அடியார்கள், 'இறைவா! நாங்கள் உன் அடைக்கலம்' என்றனர். -

(அ- சொ) உடையான் - இறைவன். படை - மழு ஆயுதம். ஆர் - கொண்ட, அழல் - நெருப்புப்போலும். மேனி - உடல். பதி - கோவில் (சிதம்பரம்.) கடை-வாயில் முன். நின்றவர் - துவாரபாலகர். ஒலம்-அடைக்கலம்.

(விளக்கம்) இறைவனைக்கான வாயில் காவலர் துணை வேண்டும். இவர்களே துவாரபாலகர் எனப்படுவர். கோவில் களில் மூலட்டானத்து வாயில் கடையில் இருபெரு உருவங்கள் நிற்பதை இன்றும் காணலாம். இவர்களே அக் கடைகாவலர். இறைவன் அடியாரை ஏற்று உபசரிக்கும் இயல்பினன் ஆதலின், வருக என அழைப்பன்.

எண்வகை யோக உறுப்புக்கள் இவை எனல் 163. இயமம் நியமமே எண்ணிலா ஆதனம்

நயமுறு பிராணயாமம்பிரத்தி யாகாரம் சயமிகு தாரணை தியானம் சமாதி அயமுறும் அட்டாங்கம் ஆவதும் ஆமே. (இ - ள்) இயமம், நியமம், ஆளவில்லா ஆதனம், நலம் மிக்க பிராணயாமம், பிரத்தியாகாரம், வெற்றி மிக்க தாரணை, தியானம், சமாதி ஆகிய எட்டும் யோக உறுப்புக்களாகும்.

(அ சொ) நயம் - நல்ல. சயம் - வெற்றி, அயம் - பிறப் பின்மை. அட்டாங்கம் - எட்டுவகை உறுப்பு.