பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

225

335

(இ - ள்) எல்லாவற்றிற்கும் தலைவனும், வேதத்தின் பொருளாய் உள்ளவனும், சோதியாய் உள்ளவனும், சுடுகின்ற நெருப்பாயுள்ளவனும், பராசக்தியுடன் பாதியாய் இருப்பவனும் ஆகிய இறைவனே முறையாக உணர்ந்து இருப்பவன் நியமத்தன் ஆவன். (அ - சொ) அங்கி - நெருப்பு. (விளக்கம்) எவ்வளவு இமயம், நியமம் உடையவனாயினும், அம்மை அப்பன உணர்பவகை இருக்க வேண்டும். பிருங்கி மகரிஷி இறைவனை மட்டும் வணங்கிப் பார்வதி தேவியை வணங்காது இருந்தனர். இதல்ை பார்வதி தவங்கிடந்து பரமேஸ்வரன் உடலில் பாதிப்பாகம் பெற்றனள். அதனல் பிருங்கி மகரிஷி வேறு வழியின்றி, அம்மை அப்பரை வணங்கி வந்தனர். இதுவே இறைவன் உமையொரு பாகனக விளங்கு வதற்குக் காரணம். .

கியமத்தன் மேற்கொள்ள வேண்டிய பண்புகள் 166. தூய்மை அருள்ஊண் சுருக்கம் பொறை செம்மை

வாய்மை நிலைமை வரைதலே மற்றிவை காமம் களவு கொலேன்னக் காண்பவை கேமிஈர் ஐந்தும் கியமத்தன் ஆமே. (இ - ள்) உள்ளம் பரிசுத்தன் ஆதல், அருளுடைய ளுதல், குறைந்த உணவு உண்பவனதல், பொறுமையுடை யவன் ஆதல், செம்மையுடையவன் ஆதல், காமம், களவு, கொலே இவற்றினின்று நீங்கினவனுய் இருத்தல் ஆகிய இவற்றில், நியமமோடு இருப்பவனே நியமத்தன் ஆவான். (அ - சொ) தூய்மை - பரிசுத்தம், ஊண் - உணவு. பொறை - பொறுமை. வாய்மை - சத்தியம். வரைதல் - நீக்குதல். நேமி - நியமமாக இருப்பவன். *- .م.

(விளக்கம்) வரைதல் என்ற சொல்ல காமம், களவு, கொலை என்ற ஒவவொன்றுடனும் கூட்டிப் பொருள் காணுதல் வேண்டும். த-ை15