பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226

236

தவம் முதலியனவும் நியமத்தவர்க்குரியன எனல்

167. தவம்செபம் சந்தோடம் ஆத்திகம் தானம்

சிவன்தன் விரதமே சித்தாந்தக் கேள்வி மகம்சிவ பூசைஒண் மதிசொல் ஈர்ஐந்தும் கிவம்பல செய்யின் நியமத்தன் ஆமே.

(இ - ள்) தவம், செபம், சந்தோஷம், ஆத்திகம், கொடை, சைவவிரதம், சித்தாந்த சாத்திரக் கேள்வி, யாகம், சிவபூசை, சிவஞானம் ஆகிய இவற்றில் ஈடுபாடு உடையவனும் நியமத்தன் ஆவான்.

(அ - சொ) தவம்-தனித்திருந்து இறைவனைச் சிந்தித்தல். ஜபம் - ஐந்தெழுத்தை ஒதுதல். சந்தோஷம் - பெற்ற அளவில் மகிழ்தல். ஆத்திகம் - இறைவன் உண்டு என்ற நம்பிக்கை கொள்ளுதல். தானம் - ஈதல். மகம் - யாகம். ஒண்மதி - சிவ ஞான உணச்சி. நிவம் - கரணம்.

(விளக்கம்) பதி, பசு பாசம் ஆகிய முப்பொருளைப் பற்றி ஆராய்தலும், அறிஞர் கூறக் கேட்டலும் நியமத்தன் மேற் கொள்ள வேண்டும் என்பார் சித்தாந்தக் கேள்வி என்ருர், சிவ ஞானம் என்பதைப் பெறுதலே அறிவுடைமை ஆதலின் அதனை ஒண்மதி எனக் கூறினர்.

சுவத்திகாசனம் தலைவனுக்கும் எனல் 163. பங்கயம் ஆதி பரந்தபல் ஆதனம்

அங்குள வாம்.இரு காலும் அவற்றினுள் சொங்கில்லை யாகச் சுவத்திகம் எண்மிகத் தங்க இருப்பத் தலைவனும் ஆமே. (இ - ள்) பத்மாஸனம் முதலாகப் பரந்துபட்ட ஆதனங்கள் உள்ளன. அவற்றுள் எட்டு ஆதனங்கள் சிறந்தவை. குற்றம் அற்ற முறையில் சுவத்திக ஆசனத்தில் இருந்தால் தலைவன் ஆகலாம்.