பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

229

感翠9

(இ - ள்) பாதங்கள் இரண்டையும் தொடையின்மேல் நிறுத்தி அசையாது இருப்பது குக்குடாசனம் ஆகும்.

(அ - சொ) ஊரு தொடை. ஏறிட்டு - ஏற்றி. முக்கி - இழுத்து. துளங்காது - அசையாது. குக்குடம் - கோழி. ஆசனம் - இருக்கை.

(விளக்கம்) குக்குடாசனம் என்பது தொடைகளில் மேல் நோக்கிய பாதங்களாக வைக்கும் பதுமாசனத்தை அமைத்துக் கொண்டு, கணக்காலுக்கும் தொடைக்கும் மத்தியில் இரண்டு கைகளையும் நுழைத்துப் பூமியில் ஊன்றி, உடலை முழங்கை வரையில் தூக்கி நிறுத்துதல் ஆகும். ஒக்க அடியினை ஊருவில் ஏறிட்டு என்பதால் பதுமாசனத்தை முன்னர் அமைத்துக் கொள்ளுதல் வேண்டும் என்பது தெளிவாகிறது. கைகளைத் தொடைக்கு நடுவாகச் செலுத்திக் கீழே ஊன்றி உடம்பை முழங்கைக்குமேல் முக்கித் தூக்கினுல்தான் குக்குடாசனம் ஆகும். இன்றேல் பதுமாசனம்ே என்க. இதுவே இவ்விரு ஆசனங்களின் வேறுபாடு. இதனைக் கோழி இருக்கை எனக் கொஞ்சு தமிழில் கூறலாம்.

சிம்மாசனம் இன்னது என்பது 172. பாதம் முழந்தாளில் பாணி களைநீட்டி

ஆதர வோடும்வாய் அங்காங் தழகுறக் கோதில் நயனம் கொடிமூக்கி லேஉறச் சீர்திகழ் சிங்கா தனமெனச் செப்புமே. (இ - ள்) முழந்தாள்மேல் பாதங்களை வைத்து, அவற்றின்மீது கைகளே நீட்டி, அன்போடு வாயைத் திறந்து கொண்டு, அழகு பொருந்தக் குற்றமிலாக் கண்களை மூக்கின் நுணியினை நோக்குமாறு வைப்பது சிம்மாசனம் ஆகும்.

(அ - சொ) பாணி - கை. ஆதரவு - விருப்பம். அங்காந்து பிளந்து; திறந்துகொண்டு. கோது - குற்றம். நயனம் - கண், கொடி - வளைந்த செப்பும் - சொல்லும்,