பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

235

急器赢

பிராணுயாமப் பயிற்சியால் தலைவனும் ஆகலாம்

179. எங்கே இருக்கினும் பூரி இடத்திலே

அங்கே அதுசெய்ய ஆக்கைக்கு அழிவில்லை அங்கே பிடித்தது விட்டள வும்செல்லச் சங்கே குறிக்கத் தலைவனும் ஆமே.

(இ-). எங்கே இருந்தாலும் அங்குக்கூட இடப்பக்க நாசி வழியே காற்றினைப் பதினறு மாத்திரை அளவு உள்ளுக்கு இழுத்துப் பூரகம் செய்யின், உடம்புக்கு அழி வில்லை. அப்படி இழுத்த வாயுவை அறுபத்துநான்கு மாத்திரை அளவு நிறுத்திப் பின் முப்பத்திரண்டு மாத்திரை அளவு வெளியே விட்டால் தலைவர் ஆகலாம். இப்பயிற்சி உடையவர் வெற்றிச் சங்கையும் முழக்குவர்.

(அ - சொ) பூரியிடம் - இடப்பக்க நாசிவழி பூரகம் செய்தல். அது இழுத்தலாகிய செயல். ஆக்கை - உடல். பிடித்து - இழுத்த வளியை நிறுத்தி.

(விளக்கம்) பிராணுயாமத்தால் தலைவன் ஆகலாம் என்பது ஈண்டுக் கூறப்பட்டது. சரீரம் அழியா நிலையினைப் பிராணுயாமத்தால் பெறலாம் என்பதைப் பன்னிப்பன்னிக் கூறுகிரு.ர். அழியாச் சரீரம் பெறுவதால் அவ்வெற்றியினை அறிவிக்கும் முறையில் சங்கை ஊதலாம் என்கிரு.ர்.

கூற்றையும் வெல்ல வழி இஃது எனல்

180. ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்

காற்றைப் பிடிக்கும் கணக்கறி வார் இல்லை. காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாளர்க்குக் கூற்றை உதைக்கும் குறிஅது ஆமே.

- (இ - ள்) இடகலையால் காற்றை ஏற்றி, பிங்கலையால்

மெல்ல இறக்கியும் பிராணவாயுவை நிறுத்தியும் வைக்கும்