பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240

240

(அ- சொ) நாசி - முக்கு. துயர்வு தொடக்கு. காயம் - உடல்.

(விளக்கம்) உயர்விழா என்றது மேல்நோக்கிச்செல்லுதலை உணர்த்திற்று. நாடிகள் ஒன்றைஒன்று தொடக்குண்டிருத் தலின் துயர் அரு என்றனர். கண்களைப் புருவ மத்தியில் மட்டும் வைப்பதோடு இல்லாமல் ரேசக பூரக கும்பம் ஆகிய பிராணுயாம முறைகளுடன் தியானிக்க வேண்டும் என்பது ஈண்டுக் கூறப்பட்டது. துயர்வு என்பது துயர் என நின்றது. உயர்விழா என்பதற்கு உயர்த்தலினின்றும் தாழாத என்பது பொருள். . x *

. சமாதி கூடியவர் பெறும் பேறு. 187. தலைப்பட்டிருந்திடத் தத்துவம் கூடும் வலைப்பட் டிருந்திடும் மாதுகல் லாளும் குலைப்பட் டிருந்திடும் கோபம் அகலும் துலைப்பட் டிருந்திடும் தூங்கவல் லார்க்கே, (இ - ள்) சமாதி நிலையில் ஈடுபட்டு இருக்க மெய்ப் பொருளாம் சிவம் வெளிப்படும். திருவருட் சத்தியும் சமாதியாம் வலேயுள்பட்டு விளங்குவள். தவத்தைக் கெடுத்துக் கொண்டிருக்கும் கோபமும் நீங்கும். இவ்வாறு தியான நிலையில் அசைவற்றிருப்பவர்களின் மனமும் தராசு முள்போல நடு நிற்கும். .

(அ - சொ) தலைப்பட்டு தியானத்தில் ஈடுபட்டு. தத்துவம் - உண்மைப் பொருளான சிவம். மாதுநல்லாள் - திருவருள் சத்தி. குலைப்பட்டு - அழித்தலைச் செய்து. துலை - தராசு. து.ாங்கவல்லார் - அசையாது தியானநிலையில் இருப்பவர்.

(விளக்கம்) உலகப் பொருள்கள் அனைத்தும் .பொய்ப் பொருள்கள். இறைவன் ஒருவனே உண்மைப் பொருள், ஆதலின், தத்துவம் என அவள் குறிக்கப்பட்டனன். இறை வனும் இறைவியும் இணைபிரியாதவர்கள் ஆதலின், இறைவன் உள்ள இடத்தில் அவள் இருப்பள். அதனல் மாதுநல்லாளும்