பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

243

243

வந்து எதிர்கொண்டு அழைக்கச் சிவபதம் சேர்தல் ஏற் படும். -

(அ - சொ) பரன் - சிவ பரம்பொருள். தெற்றும் - தெளிந்த. - -

(விளக்கம்) இறைவன் திருவடிப்பற்றும், அன்பும், அவன் புகழ் ஒதுதலும், சிந்தித்தலும், தெளிதலும், நிட்டை கூடுதலும், கேட்டலும் ஆகிய இவையே நியமம் என்பதை விளக்கியவாறு உணர்க. நியமத்தாரை அந்நியமத்தில் ஈடுபட்ட முனிவர்கள் எதிர்கொள்வர் என்பதும் பெறப்பட்டமை தெளிக.

ஆசனத்தின் பயனை அறிவித்தல் 191. வருந்தித் தவம் செய்து வானவர் கோவாய்த்

திருந்தம ராபதிச் செல்வன் இவன்எனத் தருக்தண் முழவும் குழலும் இயம்ப இருந்தின்பம் எய்துவர் ஈசன் அருளே. (இ - ள்) ஆசனங்களை மேற்கொண்டு, வருந்தித் தவம் செய்து, இதல்ை இவ்வாசனப் பயிற்சியுடையவன் தேவர்களின் தலைவனம் என்று கூறும் வண்ணம், அரிய இனிய மத்தள ஒலியும் புல்லாங்குழல் ஒலியும் இசைக்க, இறைவன் திருவருளால் தின்பம் அடைவன்.

(அ - சொ) வானவர் - தேவர். கோன் - தலைவன். முழவம். மத்தளம். குழல் - புல்லாங்குழல். இயம்ப ஒலிக்க.

(விளக்கம்) ஆசனம் இடுதல் எளியசெயல் அன்று: அரிய செயல் ஆதலின், வருந்தி என்றனர். ஆசனம் இட்டுவிட்டால் மட்டும் போதாது தியானமும் தேவை. ஆகவே, தவம் செய்து என்றனர். இத்தகைய ஆசனம் இடுபவனைத் தேவர்கள் தேவ லோகத்தில் பலவாத்தியம் ஒலிக்க வரவேற்பர் என்ற குறிப்புப் பெறப்படுதல் காண்க. இவ்வளவும் ஈசன் அருளால் கிடைப்பஏ என்பதும் ஈண்டு நினைவுபடுத்தப் பட்டது. -