பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

247

24?

(விளக்கம்) தாரணை நிலையில் இருப்பவன் மும்மூர்த்திகளை யும் தேவர்களையும் தன் இடமாகக் கொண்டவன் ஆவான். இதல்ை மும்மூர்த்திகளையும் தன் இஷ்டப்படி கேட்கச் செய்யும் ஆற்றல் படைத்தவன் ஆவான் என்பது பெறப் பட்டது.

சமாதியின் பயனைச் சாற்றுதல்

196. காரியம் ஆன உபாதியைத் தான்கடத்

தாரிய காரணம் ஏழுந்தன் பால் உற ஆரிய காரணம் ஆயத் தவத்திடைத் தாரியல் தற்பரம் சேர்தல் சமாதியே.

(இ - ள்) காரியமான எழுவகைத் துன்பங்களையும் நீக்கி, அக் காரண துன்பங்கள் ஏழும் பொருந்தித் தொடர்ந்து வருகின்ற காரணமாகிய மாயை கெடத் தவத் திடைத் தற்பரம் பொருளைச் சார்தலே சமாதியின் பயன்.

(அ - சொ) உபாதி - துன்பம். ஆரிய - சிறந்த தன்பால் - தன்னிடம். உற - பொருந்த வாரிய - நீண்ட தாரியல் ? ஒழுங்குத் தன்மை. தற்பரம் - சிவபரம்பொருள்.

(விளக்கம்) காரிய உபாதி என்பது ஆன்மாக்களுக்கு ஆணவ மலமறைப்பால் விளைந்த துன்பங்கள். அவை ஏழாவன, இறைமை இன்மை, அற்ப அறிவுடைமை, அளவுபட்டதன்மை, மாயையோடு கூடிய தன்மை, சிறிது வன்மை படைத்தல், சுதந்திரம் இன்மை, காணுமை என்பன. இவற்றைக் கடத்த லாவது சீவபோதம் நீங்கிச் சிவபோதம் உறுதலாம். ஆரிய காரண உபாதைகள் என்பன சிறந்த காரண உபாதைகளர்ம். அவை இறைமை, முற்றறிவுடைமை, எங்கும் தானதல், மாயை இன்மை, அளவற்ற வன்மை, தன் வயத்தன் ஆதல், ஒன்றி உணர்தல் என்பன்,