பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248

憩

இறைவனடி நாட எண்சித்தி பெறலாம்

197. பரிசறி வானவர் பண்பன் அடிஎனத் துரிசற காடியே துவெளி கண்டேன் அரிய தெனக்கில்லை அட்டமா சித்தி பெரிதருள் செய்து பிறப்பறுத் தானே. (இ - ள்) தேவர்கள் உள்பட எல்லா உயிர்களின் தன்மைகளையும் அறியும் பண்பனுக இறைவனது பரிசுத்த பரவெளியினைக் கண்டேன். அதனல் எனக்கு அரிய பொருள் என ஒன்றும் இல்லை. எண்வகைச் சித்திகளையும் எனக்குப் பெரிதும் திருவருள் புரிந்து என் பிறப்பையும் அறுத்தான்.

(அ சொ) பரிசு - தன்மை. வானவர் - தேவர். பண்பன் . குணவானும் இறைவன். துரிசு - குற்றம். து - பரிசுத்தம்.

(விளக்கம்) அட்டமா சித்தியைத் தமக்கு இறைவன் அருள் செய்து பிறப்பையும் அறுத்ததைக் கூறியதல்ை, மக்களும் இறைவனது திருவடி காணின் இந்நிலைகளைப் பெறலாம் என அறிவித்தவாரும்."துவெளி கண்டேன்’ என்றது இறைவனது உண்மை நிலையைக் கண்டபடியாகும். இறைவனை கண்டவர்க்கு எல்லாம் எளிதாதலின் அரியதெனக்கில்லை என்றனர். அட்டமா சித்திகள் பின்னர் அறிவிக்கப்படும். முத்தி அடைதல் பிறப்பற்ருல் அன்றி எய்தாது. ஆகவே அதனையும் அறுத்ததை அறிவித்தனர்.

பிராணயாமம் பன்னிரண்டாண்டு செய்யின் சித்தி பெறலாம் 198. மதிதனில் ஈராருய் மன்னும் கலையின்

உதயம் அதுகால் ஒழியஓர் எட்டுப் பதியும்ஈ ராருண்டு பற்றறப் பார்க்கில் திதமான ஈர்ஆறு சித்திகள் ஆமே.