பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

251

தொலைவு. நரை - வெண் மயிர். திரை - சதை மடிப்பு. பரகாயம் - அழியா உடல். -

(விளக்கம்) ஏழு வருடகாலம் அமைதியாகக் குருஉபதேசம் பெற்றுப் பிராணுயாமம் செய்தபின்பே ஒன்றன்பின் ஒன்ருகச் சில சித்திகள் கைவரப்பெறும். இதனுல்தான் முன் மந்திரத் தில் பொறுமை வேண்டும் என்றனர். -

எண்வகைச் சித்திகள்

201. தானே அணுவும் சகத்தும்தன் நோன்மையும்

மானுக் ககனமும் பரகாயத்தேகமும் தானுவ தும்பர காயம்சேர் தன்மையும் ஆளுத உண்மையும் வியாப்பியம் ஆம்னட்டே.

(இ - ள்) அணிமாவும் மகிமாவும், தனது கரிமாவும், லகிமாவும், அழியா உடல் அடையும் பிராத்தியும் தானே ஆதலான், பரகாயம் புகும் பிராகாமியமும் குறையாத ஈசத்துவமும் வசித்துவமும் ஆகிய எட்டாம்.

(அ - சொ) அணு - அணிமா. சகம் - மகிமா. நோன்மை - கரிமா. ககனம் - லகிமா, பரகாயதேகம் - பிராப்தி. தாளுவது - பிராகாமியம். ஆன.த - குறையாத ககனம் ஆகாயம். உண்மை - ஈசத்துவம். வியாப்பியம் - வசித்துவம்.

(விளக்கம்) நினைத்த அளவில் தன் தன்மையைக் கொடுத்தலால், பரமாணுவைப்போல் உடல் நுண்ணிதாத லாகிய அணிமாவைத் தானே அணு என்ருர். உலகம் பெரிது; அதுபோலப் பருத்தலின் மகிமா சகம் எனப்பட்டது. நோன்மையாவது திண்மை. பஞ்சு முதலானவற்றையும் கனமுடையதாகச் செய்தலின் நோன்மை கரிமா எனப் பட்டது. ஆகாயம் ஏனைய நான்கு பூதங்களைத் தன் அகத்து அடக்கி இருப்பினும், பஞ்சு போன்ற மென்மையானது. ஆதலின் ஆகாயம் என்பது இலேசாகும் சித்தியை உணர்த்தும் லகிமா எனப்பட்டது. பிராப்தி என்பது

முன்னிற்றலாம். இந்தச் சித் தியால் தூரத்தில்