பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

255

వీవీ

(விளக்கம்) நோய்களில் கொடியது குஷ்டம் ஆதலின் - கொடு குட்டம் எனப்பட்டது. சோகை என்பது இரத்தம் இன்மை

எண்வகைச் சித்திகள் 206. அணிமாதி சித்திகள் ஆனவை கூறில்

அணுவின் அணுவின் பெருமையின் நேர்மை இனுகாத வேகார் பரகாயம் மேவல் அணுவத் தனஎங்கும் தான்.ஆதல் என்று எட்டே. (இ - ள்) அணிமா முதலான எட்டு வகைச் சித்திகள் இவை என்று சொல்லப் போனல், அணுவினும் அணு வாகும் சித்தியும் (அணிமா), பெரியதினும் பெரியதாகும் சித்தியும்(மகிமா), அசைக்க முடியாத தன்மை ஆகும் சித்தி யும்(கரிமா), புகைபோல மிகமிக நொய்தாக விளங்குவதும், கனமான பொருள்களைப் பஞ்சுபோல நொய்தாகச் செய் தலும் ஆகிய சித்தியும் (லகிமா), மேலுள்ள ஆகாயத்தைத் தீண்டுதலும், பூமியில் இருந்துகொண்டே விரல் நுனியால் சந்திரனைத் தொடுதலும் ஆகிய சித்தியும் (பிராத்தி), மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்து பூதங் களிலும் வியாபித்து எழுதலும் ஆகிய சித்தியும் (பிராகாமியம்), உயிர்கட்கு எல்லாம் தலைவன் ஆதலும், படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல், ஆகிய செயல்களைச் செய்தலும் ஆன சித்தியும் (ஈசத்துவம்) எல்லாவற்றையும் தம் வசப்படுத்தி எங்கும் தாகை இருக்கும் சித்தியும் (வசித்துவம்) ஆகிய இச் சித்திகள் ஆகும்.

(அ - சொ) அணு - சிறியது. பெருமை - பெரியது. நேர்மை - பெரியதாய் இருத்தல். இணுகாத - அசைக்க முடி பாத. வேகு - புகை. ஆர் - போல.நேர்மை - நொய் ஆதல். பரகாயம் - மேலேயுள்ள ஆகாயம். மேவல் - தீண்டுதல். அணு - உயிர்கள். அத்தன் அவ்வளவிற்கும். ஐ தலைவன்.