பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256

255

(விளக்கம்) அட்டமாசித்திகள் ஆவன: அணிமா, மகிமா, கரிமா, லகிமா, பிராத்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் என்பன. இவை பொழிப்புரையில் நன்கு விளக்கப் பட்டுள்ளன. -

சித்திகள் பெற்றவன் சிவனே ஆவான்

237. தானே படைத்திட ഖാല് ஆயிடும்

தானே அளித்திட வல்லவன் ஆயிடும்

தானே சங்காரத் தலைவனும் ஆயிடும்

தானே இவன்எனும் தன்மையன் ஆமே.

(இ - ள்) சித்திகள் கைவரப் பெற்றவன் எல்லாவற். றையும் படைக்கவும், காக்கவும், அழிக்கவும், வல்லவன் ஆவான். இறைவனே இவன் என்னும் நிலையினையும் அடைவான்.

(அ - சொ) அளித்திட - காக்க. சங்காரம் - அழித்தல். தான் - இறைவன்.

(விளக்கம்) சித்திகள் கைவரப் பெற்றவன் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலேயும் செய்யும் ஆற்றல் படைத்தவன் ஆவான். ஏன்? இறைவனம் தன்மையையும் அடைவான் என்பதும் ஆம்.

யோகியர் இயல்புகள்

203. அணங்கற்றம் ஆதல் அருஞ்சனம் வேல்

வணங்குற்ற கல்விமா ஞானம் மிகுத்தல் சிணுங்குற்ற வாயர் சித்திதாம் கேட்டல் துணங்கற்று இருத்தல்கால் வேகத்து நுந்தலே.

(இ - ள்) ஆசை இல்லாமல் இருத்தல், அருமையான மனைவி மக்கள் முதலான சுற்றம் நீக்கி இருத்தல்; கல்வி