பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258

258

(அ சொ) சிறை - கிழத்தன்மை. பரகாயம் - பிற

உடம்பில் புகுதல். இரணம் - பொன். பூமி - சுவர்க்கலோகம். அரணன் - பாதுகாவலான இறைவன். மூஏழ் ஆம்கரன் - இரு பத்தொரு நிறமுடைய சூரியன்.

(விளக்கம்) பரகாயம் புகுதலும் வளப்பமான பரகாயத்தில் புகுதலாக இருக்கவேண்டும் என்பதால், வண்பரகாயம் என்றனர். சுவர்க்கலோகம் ஒளியுடையதாய்ப் பொன்மயமாய் இருக்கும் என்று கூறப்படுதலின், இரணம்சேர் பூமி என்று அது குறிப்பிடப்பட்டது. சூரியன் சப்தா என்னும் ஏழு குதிரைகள் பூட்டப்பட்டத் தேரில் வருவான். என்பது மரபு. இவ்வாறு கூறுவதன் கருத்து அவனது ஏழு நிறங்களையே ஆகும். இவ்வேழ் நிறங்களுடன் வெண்மை, செம்மை, பொன்மை நிறங்கள் தனித் தனிச் சேரின் இருபத்தொரு நிறங்கள் தோன்றும். ஆகவே, மூவேழாம் கரன் எனச் சூரியன் குறிக்கப்பட்டுள்ளன. ぐ /%

கடவுளைக் காண அவன்மீது காதல்வேண்டும்

210. ஒதம் ஒலிக்கும் உலகை வலம்வந்து

பாதங்கள் நோவ நடந்தும் பயன்இல்லை காதலின் அண்ணலைக் காண இனிஅவர் நாதன் இருந்த நகர்அறி வோரே. (இ - ள்) ஈரமுடையதும், ஒலித்துக் கொண்டிருப் பதும் ஆகிய கடலால் சூழ்ந்த உலகைச் சுற்றிக் கால்கள் நோவ நடந்தும் பயன் ஏற்படாது (அதாவது அவன் இருக் கின்ற இடத்தைக் காண முடியாது). மெய்யான ஆசை யோடு பெருமையில் சிறந்த இறைவனைக் காண விரும்பும் அடியவரே அவனுக்கு இனியராகி இறைவன் இரு ந்த இடத்தை அறிந்தவர் ஆவார். Z -

(அ- சொ) ஒதம் - ஈரம், அண்ணல் . பெருமையிற் சிறந்த இறைவன்.