பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

259

#59

(விளக்கம்) கடல் என்னும் சொல் ஒதம் ஒலிக்கும் என்று குறிப்பிட்ட காரணத்தினுல் வருவிக்கப்பட்டது. தலயாத்திரை தீர்த்த யாத்திரை செய்துதான் இறையைக் காணவேண்டும் என்பதில்லை. அன்பினுல் பக்தியினல் இருந்த இடத்திலேயே அவனைக் காணலாம் என்பது இம் மந்திரப் பொருள்.

உடம்பை வளர்த்தல் இன்றியமையாதது

211. உடம்பார் அழியின் உயிரார் அழிவர்

திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன் உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே.

(இ - ள்) உடம்பு அழிந்தால் உயிரும் அழியும். உறுதியான மெய்ஞ்ஞானத்தை அடைய முடியாது. ஆகவே, உடம்பை வளாக்கும் உபாயம் அறிந்துகொண் டேன். எனவே, உடம்பை வளர்த்தேன்; அதனல் உயிரையும் வளர்த்துக் கொண்டேன்.

(அ - சொ) உடம்பார் - உடம்பு. உயிரார் - உயிர். திடம்பட உறுதியான.

(விளக்கம்) உடம்பும் உயிரும் மிகமிக இன்றியமை யாதன ஆதலின், அவற்றின் சிறப்பு நோக்கி, ஆர் என்னும் மரியாதைப் பன்மை விகுதி கொடுத்துக் குறிக்கப்பட்டன.

உடம்பில் இறைவன் உளன்

212. உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன் உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன் உடம்புளே உத்தமன் கோயில்கொண்டான் என்று உடம்பினை யான் இருந்து ஓம்புகின் றேனே.