பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260

£öö

(இ - ள்) உடம்பின் அருமை தெரிதற்கு முன்பு அதனைக் குற்றமுடைய பொருளாக எண்ணி இருந்தேன். பின்னர் உடம்புக்குள்ளே சிறந்த பொருள் இருப்பதை அறிந்தனன். உடம்புக்குள்ளே சிறந்தவனகிய இறைவன் கோயில் கொண்டு வீற்றிருக்கின்ருன் என்பதை உணர்ந்து கொண்டனன். ஆகவே, இவ்வுடம்பை நான் கண்ணும் கருத்துமாகக் காத்துக் கொண்டிருக்கின்றேன்.

(அ - சொ) இழுக்கு - குற்றமுடையது. உறுபொருள் சிறந்த பொருள்: பெரும் பொருள். உத்தமன் - இறைவன். ஒம்புகின்றேன் - காப்பாற்றுகின்றேன்.

(விளக்கம்) இறைவன் எங்கும் நிறைந்தவன். ஆகவே அவனுக்கு இடம் உடம்பும் ஆயிற்று. அங்ங்னம் இடமாகக் கொண்டுள்ள உடலை இழுக்குடையதாகக் கருதக் கூடாது.

உடம்பைச் சுத்தி செய்யும் முறை "213. சுழற்றிக் கொடுக்கவே சுத்திக் கழியும்

சுழற்றி மலத்தைக் கமலத்தைப் பூரித்து உழற்றிக் கொடுக்கும் உபாயம் அறிவார்க்கு அழறறித் தவிர்ந்துஉடல் அஞ்சனம் ஆமே. (இ - ள்) பிராண வாயுவை இடகலை பிங்கலை ஆகிய இரண்டு நாடிகளில் மாறி மாறி இழுத்து வாங்கி இருத்தி விட்டால் நாடிகள் சுத்தமாகும். அசுத்தம் கழிந்துவிடும். இவ்வாறு அசுத்தத்தை நீக்கி, உள்ளமாகியதாமரையினைத் தூய காற்றில்ை நிறைவிக்க வேண்டும். எழுபத்திரண் டாயிரம் நாடிகளிலும் அத் துாய காற்றை உழலுமாறு செய்ய அறிந்தவர்களின் உடம்பு, நெருப்பு வெம்மையால் ஆகாத மைபோல யோகாப்பியாசத்தால் ஆனதாக அமையும். -

(அ- சொ) மலம் - அசுத்தம். கமலம் - இருதயமாகிய தாமரை. பூரித்து - தூய காற்றினல் நிறைவித்து. உஆற்றி