பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

261

261

உழலச் செய்து அழற்றித் தவிர்ந்து நெருப்பின் வெம்மை - யால் உண்டாகாத, அஞ்சனம் - மை. -

(விளக்கம்) இடகலை, பிங்கலை என்பன இட நாசித் துவாரம், வல நாசித் துவாரம். இவற்றின் வழியே சுவாசிக்கப் படும் காற்றையும், வெளியே விடும் காற்றையும் தன் போக்கிலே போகவும் வரவும் விடாமல், தேகப் பயிற்சியால் இடகலையில் இழுத்து பிங்கலையில் விட்டு, பிங்கலையில் இழுத்து இடகலையில் விட்டுப் பழகும் பயிற்சியே சுழற்றிக் கொடுத் தல் ஆகும். உள்ளுக்கு வாங்கிய துய காற்றை உள்ளக் கமலத் தில் நிறைவிக்க வேண்டும். எல்லா நாடிகளிலும் பரவச் செய்ய வேண்டும். இதுவே "பூரித்து' எனப்பட்டது. மாந்திரீக மையை வசியத்தின் பொருட்டுக் கையாளுவர். அம்மையினை ஒமாக்கினி மூலம் தயாரிப்பர். அவ்வாறு தயாரிக்காமல் உடம்பையே மையாக மேலே சொன்ன பயிற்சியின் வாயிலாகப் பயன்படுத் தலாம் என்பதே இம்மந்திரம் கூறுகிறது. இத்தகைய யோக உடம்பு நெருப்பின் வெம்மையால் தயாரிக்கப் பட்டது அன்று என்பதை உணர்த்தவே, அழற்றித் தவிர்ந்து எனப்பட்ட து.

யோகப் பயிற்சியினுல் அடையும் பயன் 214. அஞ்சனம் போன்றுடல் ஐஅறும் அந்தியில் வஞ்சக வாதம் அறும்மத்தி யானத்தில் செஞ்சிறு காலையில் செய்திடில் பித்தறும் நஞ்சறச் சொன்னுேம் கரைதிரை நாசமே. (இ) - ள்) மை போன்ற உடலுக்குள்ளே இருக்கின்ற கப நோய், மாலைக் காலத்தில் செய்யப்படும் யோகப் பயிற்சியினல் நீங்கும். நடுப் பகலில் யோகாப்பியாசம் புரிந்தால் வஞ்சகமான வாதநோய் நீங்கும். விடியற்காலை யில் யோகப்பயிற்சியை மேற்கொண்டால் பித்த நோய் போகும். இவற்றை உங்கள் உடம்பில் உள்ள விஷத் தன்மை ஒழியச் சொன்ளுேம். கப, வாத, பித்தங்கள் நீங்க மட்டும் இவ் யோகப் பயிற்சி பயன்படும் என்று எண்ண வேண்டா, நரையும், திரையும் *ھlمی நீங்கும், • *.