பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

265

265

வாரசூலே கிற்கும்போது பயணம் செய்யும் முறை

219. தெக்கணம் ஆகும் வியாழத்துச் சேர்திசை

அக்கணி சூலமும் ஆம்இடம் பின்ஆகில் துக்கமும் இல்லை வலம்முன்னே தோன்றி.டின் மிக்கது மேல்வினை மேல்மேல் விளையுமே.

(இ - ள்) வியாழக்கிழமை தெற்கே சூலம் நிற்கும். எலும்பு மாலை அணிந்த சூலம் இடப்பக்கமேனும் பின்பக்க மாகவேனும் இருக்கப் பயணம் செய்தால் துன்பம் வராது. வலப்பக்கமாகவும் முன்பாகவும் இருக்குமானல், செயல்கள் துன்பமாக முடியும்.

(அ - சொ) தெக்கணம் - தெற்கு. அக்கு - எலும்பு மாலை.

(விளக்கம்) இம்மந்திரம் சூலம் நிற்கும் திசை நோக்கிப் பயணம் செய்யக்கூடாது என்பதை அறிவிக்கிறது. திங்கள், சனி, வியாழக்கிழமைகளில் மேற்கு நோக்கியும்; வியாழன், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் வடக்கு நோக்கியும்; செவ்வாய், புதன், திங்கள் சனிக்கிழமைகளில் தெற்கு நோக்கியும் பயணம் செய்க என்பதாம்.

கேசரி யோகம் செய்ய வல்லார்க்கு

இறப்பு இல்லை - 220. இடக்கை வலக்கை இரண்டையும் மாற்றித்

துதிக்கையால் உண்பார்க்குச் சோரவும் வேண்டா உறக்கத்தை நீக்கி உணரவல் லார்கட்கு இறக்கவும் வேண்டா இருக்கலும் ஆமே. (இ - ள்) இடப்பக்க நாடி, வலப்பக்க நாடி வழி யாகப் பிராணவாயுவை உட்கொள்ளுதலே மாற்றி, நடுவில் உள்ள நடுநாடியாய சுழுமுனையால் அவ்வாயுவை நுகர வல்லவர்கட்குத் தளர்ச்சி ஏற்படாது. தூக்கத்தை நீக்கி