பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266

366

இவ்வழியில் தியானம் செய்ய வல்லவர்கட்கு இறப்புக் கிடையாது. என்றும் நிலைத்து இருக்கலாம்.

(அ - சொ) இடக்கை - இடப்பக்க நாடி, வலக்கை வலப்பக்க நாடி. துதிக்கை - நடு நாடியாகிய சுழுமுனை. உண்ணுதல் - நுகர்தல். இருக்கல் - அழியா நிலையில் இருத்தல்,

(விளக்கம்) கேசரி ஆசனம் இன்னது என்பது முன்னர் விளக்கப்பட்டது. அவ்வாசனத்தின் பயனே இங்குக் கூறப் படுகிறது. உறக்கத்தை நீக்கி இந்த யோகத்தில் ஈடுபட வேண்டும் என்று கூறினரேனும், ஆகாரத்தையும் மாதர் புணர்ச்சியினையும் நீக்குதல் வேண்டும் என்பதும் குறிப்பாக உணர்த்தப்பட்டது.

பரியங்கி யோகத்தால் பார்வதியின்

அருளைப் பெறலாம் . 221. பரியங்கி யோகத்துப் பஞ்ச கடிகை

அரியஇவ் யோகம் அடைந்தவர்க் கல்லது சரிவளை முன்கைச்சி சந்தனக் கொங்கை உருவித் தழுவ ஒருவற்கொண் ணுதே. (இ - ள்) பரியங்கியோகத்தில் ஐந்து நாழிகை நேரம் ஈடுபட்டிருப்பவர்கள்தாம், நழுவும் வளையல்களை முன் கையில் அணிந்தவளும், சந்தனம் பூசப்பட்ட முலையினை யுடையவளுமான இறைவியை அணுகி, அவளது அருள் இன்பத்தில் தினக்க முடியும். ஏனையவர்க்கு இயலாது. (அ - சொ) பஞ்சகடிகை - ஐந்து நாழிகை. வளை - வளையல். கொங்கை - முலே. ஒண்னது - இயலாது.

(விளக்கம்) பரியங்கி யோகமாவது, முழந்தாள்கள் இரண்டின் மேலும் கைகளை நீட்டிப் படுத்துக்கொண்டு யோக நிலையில் இருத்தல் ஆகும். இரண்டரை நாழிகை கொண்டது ஒரு மணி நேரம். ஆகவே ஐந்து நாழிகை என்பது இரண்டு