பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

269

269

(அ - சொ) அளகம் - கூந்தல். நல்நுதல் - நல்ல நெற்றி. களவு - மறைவு. காயம் - உடம்பு. இந்நீர் - இந்த மூத்திர நீர். வேம்பு - வேப்பிலை. மேனி - உடம்பு. கபாலம் - தலை மயிர். இருளும் - கறுகும்.

(விளக்கம்) நல்நுதலாய் என்றது மகடூஉ முன்னிலை எனப் படும். அதாவது ஒரு பெண்ணே நோக்கிக் கூறுவது போன்ற பாவனை. .

பல் ஆண்டு உயிருடன் வாழ வழி

225. கானும் பரிதியின் காலை இடத்திட்டு

மானும் மதிஅதன் காலை வலத்திட்டுப்

பேணிஇவ் வாறு பிழையாமல் செய்விரேல்

ஆணி கலங்காதவ் ஆயிரத் தாண்டே.

(இ - ள்) சூரிய கலையாகக் காணப்படுகின்ற பிங்கலே வழியாக வரும் காற்றை இடகலையாக நடமாடச் செய்தும், மாட்சிமையுடைய சந்திரகலையாகிய இடகலையில் இயங்கும் காற்றைச் சூரிய கலையாகிய வடகலை (பிங்கலை) வழியாக இயங்கச் செய்தும் வருவாராயின், (அதாவது இவ்வாறு செய்யும்போது தவறு ஏற்படாமல் செய்து வருவாராயின்) ஆயிரம் ஆண்டானலும் உடல் கலங்காது.

(அ - சொ) பரிதியின்கால் - சூரியன் கலையாகிய பிங்கலை வழியாக வரும் காற்று. இடத்து இட்டு - சந்திர கலையாகிய இடகலை வழியாக விட்டு. மானும் . மாட்சியுடைய. மதியதன்காலை - சந்திரகலையாகிய இடகலை வழியாக வரும் காற்று. வலத்து இட்டு - பிங்கலை வழியாக விட்டு. பேணி . குற்றம் வராமல் காத்து. ஆணி - உடம்பு.

(விளக்கம்) பிங்கலை நாடியில் வரும் பிரான வாயுவை இடகலை வழியாகவும், இடகலை வழியாகவரும் பிராண வாயுவைப் பிங்கலை வழியாகவும் வருமாறு பயிற்சி செய்ய வல்லவர், தம் உடம்பிற்கு அழிவின்றிப் பல்லாண்டு வாழ்வர் என்பதாம். -