பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

275

275

(இ - ள்) அன்புடன் முன்நின்று நிவேதனம் செய்து, பொன் போல் ஒளிவிடும் விளக்கையேற்றி, நான்கு திசை யும் புகை தீபம் காட்டி, துன்பம் யாவற்றையும் நீக்கித் தொழுகின்றவர்கள், நினைத்துப் பார்த்தால், இவ்வுலக இன்பத்தையும் மறுமை இன்பமான முத்தி இன்பத்தையும் அடைவர். -

(அ- சொ) அமுதம் - பொங்கல் முதலான நிவேதனம்’ ஏற்றி நிவேதனம்செய்து. இன்பு- இவ்வுலக இன்பம். முத்திமோட்சம். - -

(விளக்கம்) கண்டு நாம் பூசாகாலத்தில் எரிக்கும் கற்பூரம் எரிக்கப்படாமையை அறியவும். பழங்காலப் பூசை முறையில் எரி கற்பூரம் பூசைக்கு ஏற்றதாகக் கொள்ளப்படவில்லை. புகை யும், தீபமும்தாம் வழிபாட்டிற்குப் பயன்படுத்தப் பட்டன.

இறைவன் பூசையால் எய்தும் பலன் 234. எய்தி வழிப்படில் எய்தாதன இல்லை

எய்தி வழிப்படில் இந்திரன் செல்வமும் எய்தி வழிப்படில் எண்சித்தி உண்டாகும் எய்தி வழிப்படில் எய்திடும் முத்தியே. (இ - ள்) இறைவனே அடைந்து வழிபட்டால் அடைய முடியாத பொருள் ஒன்றுமே கிடையாது. (எல்லாவற்றை யும் அடையலாம்). இந்திரன் அனுபவிக்கும் செல்வங்களை யும் பெறலாம். எண் வகைச் சித்திகளையும் பெறலாம். மோட்ச இன்பமும் கிடைக்கும்.

(அ - சொ) எய்தி - அடைந்து. எய்தாதன - அடைய முடியாதவை. * (விளக்கம்) வழிபாட்டினல் எல்லாம் பெறலாம். எண் வகைச் சித்திகள் அணிமா, கரிமா, லகிமா, மகிமா, பிராப்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் என்பன. இவற்றின் விளக்கம் முன்னர்க் கூறப்பட்டது. ஆண்டுக் காண்க.