பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

3. திருமூலரின் சிறப்பு

சுந்தரமூர்த்தி சுவாமிகள் நம்பிரான் திருமூலர், என்று பாடி, இவரை "நம்பிரான்" என்று உரிமை கொண்டாடினர். நம்பியாண்டார் நம்பிகள், "முழுத் தமிழின்படி மன்னு வேதத் தின் சொற்படியே பரவிட்டு என் உச்சி அடிமன்ன வைத்த பிரான் மூலன் ஆகின்ற அங்கணனே' என்று மொழிந்து, அவரது திருவடிகளைத் தம் சிரமேல் வைத்துப் போற்றினர்.

பாடியவர் இன்னர் என்று அறியக் கூடாத புலவர் ஒருவர், "திருமூல தேவனையே சிந்தை செய்வார்க்குக் கருமூலம் இல்லையே காண்’ என்று பாடித் திருமூலரைச் சந்தித்து வந்தாலே பிறவிக்கு ஏதுவில்லை என்பதை வற்புறுத் திச் சென்றிருக்கின்றனர். தாயுமான சுவாமிகள், "சக்கர வர்த்தி தவராச யோகி எனும் மிக்க திருமூலன் அருள் மேவுநாள் எந்நாளோ என்று பாடி, அவரைச் சக்கரவர்த்தி தவராச யோகி மிக்க திருமூலன்' என்று போற்றிய தோடன்றி, அவரது அருளை மேவும் நாள் எந்நாளோ என்று பாடித் தம் அவாவினையும் கூறிப் போற்றியுள்ளனர். மூலர் மரபு தனிச்சிறப்புடையது என்பதைத் தாயுமானவரின் மாணவராகிய அருளையர் என்பவர்.பெருமிதத்துடன், மூலன் மரபில் முளைத்த மெளனிதன் பாலன் யான் எனவும் பரி வோடும் பகர்ந்தோன்' என்று பகர்ந்துள்ளனர்.

சேக்கிழார் பெருமானர் திருமூலரை, "நந்தி அருள்பெற்ற நான்மறை யோகிகள்” என்றும், அணிமாதி வரும் சித்தி பெற்றுடையார்” என்றும், அருள் புரியும் தவ முனிவர்" என்றும் சைவ நெறி, மெய்யுணர்ந்தோர்’ என்றும், 'பொங்கு தவத்தோர் என்றும், எண் நிறைந்த உணர்வு டையார்' என்றும், 'பெருகு ஆர்வச் செற்ற முதல் தடிந்தவர்,' என்றும், நலம் சிறந்த ஞானயோகக் கிரியா சரியை எலாம்