பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280

盛&莎

கரத்தைத் தியானிப்பதைக் காட்டிலும் வேறு சிறந்த வழி வகை இல்லை. இவர்கட்கு முடிவும் இல்லை.

(a - சொ) புகை - துக்கம். குகை - நரகம், மன் - நிலை பெற்ற, சிகை - முடிவு.

(விளக்கம்) சக்கரம் என்பது செம்புத் தகட்டில் பல அறைகளைக் கீறி அவற்றில் மந்திர எழுத்துக்களை அமைத்துப் பூசைக்குரியதாக வைத்துக் கொள்வதாகும். இச் சக்கரம் ஒவ்வொரு தெய்வத்திற்கும் உண்டு. ஈண்டு ரீ சக்கரத்தைப் பூசிப்பதன் பலன் கூறப்பட்டது. பூரீ தேவி ஆவாள். - .

யார் சைவ சித்தாந்திகள்?

241. கற்பன கற்றுக் கலைமன்னும் மெய்யோகம்

முற்பத ஞானம் முறைமுறை கண்ணியே தொற்பதம் மேவித் துரிசற்று மேலான தற்பரம் கண்டுளோர் சைவசித் தாந்தரே. (இ - ள்) கற்கவேண்டிய சாத்திரங்களைக் கற்று, நூல் களில் பொருந்திய உண்மையான சிவயோக முதலான பத ஞானங்களே முறைமுறையாக அடைந்து, சமாதி நில்ை பொருந்தி, ஆணவம் கன்மம் மாயை என்னும் குற்றங்களை ஒழித்து, மேலான பரம்பொருளைக் கண்டுள்ளோர் சைவ சித்தாந்தர் ஆவார்.

(அ - சொர் கலை - நூல். மன்னும் - பொருந்திய, மெய் - உண்மையான யோகம் - சிவயோகம். முன்பத ஞானம் - முன்னர் மேற்கொள்ள வேண்டிய சரியை, கிரியை, யோகம், ஞானம். நண்ணி - அடைந்து. தொல்பதம் - சமாதி நிலை. துரிசு - குற்றம். தற்பரம் - இறைவன்.

(விளக்கம்) ஈண்டுக் கற்பன சைவ சித்தாந்தக் கட்டளை நூற்கள், சித்தாந்த சாத்திரங்கள், தோத்திரங்கள், ஜீவன் முத்தர் வரலாறுகள் முதலானவை.