பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282

Ż82

(இ - ள்) உயிர்க்கு உயிராய் இறைவன் ஒன்ருய் இருத் தலை அறிதல் ஒளியுடைய ஞான பூசையாகும். உயிர்கட்கு ஒளி தருகின்ற இறைவனை உள்ளத்தில் நோக்குதல் பெரிய யோகப் பூசை ஆகும். இறைவனிடத்தில் பிரானப் பிர திட்டை ஆகிற ஆவாகனம் செய்தல் புறப் பூசை ஆகும். கடைசியாக அவ் இறைவனை அன்புடன் வழிபடுவது சிவ பூசை ஆகும். - -

(அ - சொ) உயிர்ப் பெறும் - பிராணப் பிரதிட்டை. ஆவாகனம் - அமைக்கும் உருவில் அழைத்தல்.

(விளக்கம்) ஈண்டுச் சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய பூசைகள் இன்னின்ன என்பது கூறப்படுகிறது. புறப் பூசை என்பது சரியை ஆகும். சிவபூசை என்பது கிரியை ஆகும்.

இறைவன் உள்ளத்தில் குடிகொள்ள வழி 244. காடும் நகரமும் கல்திருக் கோயிலும் தேடித் திரிந்து சிவபெரு மான் என்று பாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின் கூடிய நெஞ்சத்துக் கோயிலாக் கொள்வனே. (இ - ள்) நாடு நகரமும் நல்ல திருக்கோயில்கள் ஆகிய இவற்றைத் தேடித்திரிந்து, எங்கும் இறைவனே இருக்கின் முன் என்று உணர்ந்து, அவனைப் பாடுங்கள்; வணங்குங் கள்; வணங்கியபின், அவன் வணக்கம் பொருந்திய உங்கள் உள்ளத்தைக் கோயிலாகக் கொள்வான். -

(அ - சொ) பாடுமின் பாடுங்கள். பணிமின் - வணங் குங்கள்.

(விளக்கம்) மூர்த்தி, தலம், தீர்த்த தரிசனம் தேவை. அவற்றின் பொருட்டு யாத்திரை செய்தல் வேண்டும். அப்படிச் செய்தபோது இறைவன் எங்கும் உளன் என்னும் அறிவு வருதல் வேண்டும். அவ்வறிவினல் அவனைப் பணிந்து பாடுதல் வேண்டும். இந்தக் கருத்துக்களை இம்மந்திரம் உபதேசிக்கிறது.