பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

285

25。

ஞானத்தின் சிறப்பு 248. ஞானத்தின் மிக்க அறநெறி காட்டில்லை

ஞானத்தின் மிக்க சமயமும் நன்றன்று ஞானத்தின் மிக்கவை கல்முத்தி நல்காவாம் ஞானத்தின் மிக்கார் நரசின்மிக்காரே. (இ- ள்) உண்மை ஞானத்தை விட, அதாவது இறை ஞானத்தைவிட மிக்க தர்மநெறி உலகில் வேறு எதுவும் இல்லை. அதைவிடச் சிறந்த சமயமும் எதுவும் கிடையாது. இந்தப் பரஞானத்தை விட மிக்கவை என்று சொல்லப் படுபவை எவையாயினும் நல்ல மோட்ச இன்பத்தைத் தரமாட்டா. ஆகவே மெய்ஞ் ஞானத்தில் மிக்கவர் மண்ணுலக மக்களே ஆயினும் உயர்ந்தவர்களே ஆவார். (அ - சொ) அறநெறி - தரும வழி. நல்கா - கொடுக்க மாட்டா. முத்தி - மோட்சம். நரர் - மண்ணுலக மக்கள்.

(விளக்கம்) நாட்டில்லே என்பதற்கு எந்த நாட்டிலும் இல்லை என்று பொருள் படுத்தினுலும் இழுக்கு இல்லை.

குருபக்தியே சன்மார்க்கம் ஆகும் 249. தெரிசிக்கப் பூசிக்கச் சிந்தனை செய்யப்

பரிசிக்கக் கீர்த்திக்கப் பாதுகம் சூடக் குருபக்தி செய்யும் குவலயத் தோர்க்குத் தருமுத்திச் சார்பூட்டும் சன்மார்க்கம் தானே. (இ- ள்) குருவைக் காணுதலும், பூசித்தலும், நினைத்த லும், அவரைத் தொட்டுக் கும்பிடுதலும், அவரது புகழைப் பரப்புதலும், அவரது திருவடிகளைச் சிரமேல் கொள்ளுத லும் ஆகிய இந்த நெறியில் குருபக்தியைக் காட்டும் உலகத்தார்கட்குச் சன்மார்க்க வழி, மோட்சமாகிய இன்பத்தை ஊட்டும்; அதாவது அனுபவிக்கச் செய்யும்.