பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

287

2.3%

(இ - ள்) இறைவனைப் பூசைசெய்தலும். அவனது புகழ்களேயேவாசித்தலும், அவனேயே போற்றுதலும், ஜபம் செய்தலும், குற்றமில்லாத நலல தவத்தைச் செய்தலும், சத்தியத்தோடு நடத்தலும், பொருமைக்கு இடம் இல்லாமல் இருத்தலும், அன்பு கொண்டு அன்னப் பறவை போல ஆன்ம சுத்தி செய்தலும், மற்றும் பலவாகிய குற்றம் அற்ற செயல்களை மேற்கொள்ளுதலும் சத்புத்திர மார்க்கம் ஆகும்.

(அ சொ) ஆசு - குற்றம். வாய்மை - உண்மை. அழுக்கு இன்மை - பொருமைக் குணம் இல்லாமை. அன்னம். அன்னப் பற்வை. மார்க்கம் - வழி.

(விளக்கம்) இறைவனுடைய திருவருளே அடைவதற்குரிய வழிகள் பற்பல. அவற்றுள் சத்புத்திர மார்க்கம், தாசமார்க்கம் சகமார்க்கம், சன்மார்க்கம் என்னும் நான்கும் அடங்கும். சத்புத்திர மார்க்கமாவது, இறைவனைத் தந்தையாக எண்ணி ஆன்மா புத்திரனுக அமைந்து வழிபடும் வழி ஆகும்; திருஞான சம்பந்தர் காட்டிய வழி இதுவே. தாசமார்க்கம் என்பது இறைவனை எசமானளுகப் பாவித்து உயிர்கள் பணியாளனுக இருந்து வழிபடும் நெறியாகும்; இது திருநாவுக்கரசர் காட்டிய வழி. சகமார்க்கம் என்பது இறைவன் தன் தோழன் என்று கொண்டு சிவனை வழிபடும் வழியாகும்; இது சுந்தரர் காட்டிய வழி. சன்மார்க்கம் என்பது இறைவனே ஞானசாரியனுகக் கொண்டு, ஆன்மா சீடனுக இருந்து வழிபடும் வழியாகும்; இது மாணிக்கவாசகர் காட்டிய வழி. அன்னம் பாலில் கலந்த நீரை நீக்கிப் பாலைத் தூய்மையாக்கிப் பருகுகிறது. அது போல ஆன்மா தியானவகையில் சுத்திசெய்து கொள்ளல், தவம் என்பது காடுகள் புக்குக் காய் கனிகள் அருந்தி வாழ்தல் மட்டும் அன்று; இறைவனைத் தியானம் செய்து கொண்டு, தம்மால் எவ்வுயிர்க்கும் தீங்கினைச் செய்யாது இருத்தலும் ஆகும்.