பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288

288

வழிபாட்டினல் இறைவன் வெளிப்படுவான்

என்றும் தொழுவன் எழில்பரஞ் சோதியைத் துன்று மலர்துவித் தொழுமின் தொழுக்தொறும் சென்று வெளிப்படும் தேவர் பிரானே. இகள் நான் இறைவன் திருமுன் நின்று வணங்கு வேன்; பூமியில் வீழ்ந்து வணங்குவேன். இவ்வாறு அழ கிய பேரொளிப் பிழம்பாகிய இறைவனை எப்பொழுதும் எந்த நாளும் வணங்குவேன். ஆகவே நீங்களும் கொத்துக் கொத்தாக மலர்களை அவன் திருவடிகளில் தூவி வணங்குகள். அப்படி வணங்க வணங்க அந்தத் தேவாதி தேவன் தானக நம்மிடம் வந்து நம் கண்முன் தோன்றி அருள் செய்வான்.

(அ - சொ) கிடந்து - தரையில் வீழ்ந்து. எழில் - அழகு.

பரஞ்சோதி - பேர் ஒளி வடிவான இறைவன். துன்று - நெருக்க மான, தேவர்.பிரான் - தேவர்களின் தலைவன்.

(விளக்கம்) இறைவன் ஒளியினும் மேலான ஒளி இல்லாமையாலும், அவனது ஒளியே சூரிய சந்திரர்கட்கு ஒளி தருதலாலும் அவனைப் பரஞ்சோதி என்றனர். மலர்களைப் பிய்த்துப் பிய்த்து அவன் திருவடிகளில் இடாமல் முழுமை பர்கவும் கொத்துக் கொத்தாகவும் இடவேண்டும் என்னும் கருத்தில் துன்று மலர் என்றனர். தொழுவாரை நோக்கி இறைவன் தானே வருதலின் சென்று என்றனர். இறைவனுக்கு மகாதேவன் என்னும் பெயர் இருத்தலின், அவனைத் தேவர் பிரான் என்றனர்,

தாச மார்க்கம் இன்னது எனல்

253. எளிஅனல் தீபம் இடல்மலர் கொய்தல்

அளிதின் மெழுகல் அதுதூர்த்தல் வாழ்த்தல்

பளிமணி பற்றல் பல்மஞ் சனம்ஆதி

தளிதொழில் செய்வது தான்தாச மார்க்கம்.