பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

291

251.

வழிபடும் சமயம், முருகனை வழிபடும் சமயம், சூரியன வழிபடும் சமயம் என ஆறு இருத்தலின், இருமுச்சமயம் என்றனர். இவ்வாறு சமயங்களும் இறைவனே அடைய வழி காட்டும். -

இறைவன் திருவடியே எல்லாம் ஆவது 256. மந்திரம் ஆவதும் மாமருந்தாவதும்

தந்திரம் ஆவதும் தானங்கள் ஆவதும் சுந்தரம் ஆவதும் தூய்நெறி ஆவதும் எந்தை பிரான்தன் இனஅடி தானே. (இ- ள்) எமது தந்தையான இறைவனது திருவடி களே மந்திரம், மருந்து, தந்திரம், தருமங்கள், அழகு. நன் னெறி ஆகிய இவைகள் ஆகும். - --

(அ - சொ) மா - சிறந்த தந்திரம் - ஆகமங்கள். தானம் - தருமம். சுந்தரம் - அழகு. துய் - சுத்தமான நெறி வழி. எந்தை - எம் தந்தை. இணை - சேர்ந்த, - (விளக்கம்) இறைவன் திருவடிகள் எல்லாம் தரும்.

குருவே இறைவன் 257. குருவே சிவம்எனக் கூறினன் நந்தி

குருவே சிவமென் பதுகுறித் தோரார் குருவே சிவனுமாய்க் கோனுமாய் கிற்கும் குருவே உரைஉணர் வற்றதோர் கோவே. இ - ள்) எனது குருநாதனும் நந்தி, குருதான் இறைவன் என்று கூறினன். அந்தோ! குருவே இறைவன் என்பதை மக்கள் அறியாராய் இருக்கின்ருர்களே! குருதான் இறைவய்ை எவர்க்கும் எவற்றிற்கும் தலைவனும் இருப் பவன்; குருதான் சொல்லுக்கும் உணர்வுக்கும் அப்பால் பட்ட தலைவனுவான்.

(அ - சொ) ஒரார் - சிந்திக்கமாட்டார். கோன் - தலைவன் கோ - தலைவன். f