பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296

żĝő

துறவியர் இயல்பு 263. பிறப்பறி யார் பல பிச்சைசெய் மாந்தர்

சிறப்பொடு வேண்டிய செல்வம் பெறுவர் மறப்பிலர் ஆகிய மாதவம் செய்வார் பிறப்பின நீக்கும் பெருமைபெற் ருரே.

(இ- ள்) பிறப்பை ஒழிக்கும் .ெ துறவியர், பசி வந்துத்றபோது பிச்சையேற்று துறவிகள், இனிமேல் வரும் பிறப்பை அற்றவர் ஆவர். சிறப்போடு கூடிய அருட் செல்வத்தைப் பெறுவர். மறதியை அறியார். பெருந்தவத்தையே மேற்கொள்வர்.

(அ - சொ) மா - சிறந்த பெரிய.

(விளக்கம்) நாம் செய்யும் செயல்களுக்குக் காரணமே பிறப்பு உண்டாதற்குக் காரணம். இறைவனைப் பற்றினுல் பிறப்பினே ஒழிக்கலாம். அங்கனம் பற்றுபவர் துறவிகள், தவசிகள். ஆகவே அவர்கள் பிறப்பினை நீக்கும் பெருமை பெற்ருர் எனப்பட்டனர். எல்லாம் துறந்தவர் தவசியர், துறவியர். அவர்கட்குக் குடும்பம் இல்லை. ஆகவே பிச்சை ஏற்று உண்பதே அவர்கள் வாழ்க்கை. அத்தகையவர்களையே பிச்சை செய் மாந்தர் என்றனர். பிச்சைச் சோற்றிற்குப் பிறப்பு இல்லே' என்பது பழமொழி. எப்போதும் ஐம்புலன் களே அடக்கித் தியான நிலையில் இருத்தலின், மறப்பிலராகிய மாதவம் செய்வார் எனப்பட்டது.

இல்லறம் ஏற்பினும இறைவனை மறவற்க

264. பள்ளம் முதுநீர் பழகிய மீன் இனம்

வெள்ளம் புதியவை காண விரும்புறும் கள்ளவர் கோதையர் காமனுே டாடினும் உள்ளம் பிரியா ஒருவனக் கானுமே,