பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

299

ġġġ

திருநீற்றின் சிறப்பு 267. கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை

மங்காமல் பூசி மகிழ்வரே யாமாகில் தங்கா விண்களும் சாரும் சிவகதி

சிங்கார மான திருவடி சேர்வாரே.

(இ.) உலக முடிவில் அனைத்தையும் அழித்து அது போது எஞ்சிய எலும்புகளை அணியும், இறைவன் பூசிக் கொள்ளும் உடலுக்குக் கவசமாக விளங்கும் திருநீற்றைச் சிறிதும் தடையில்லாது உடலில் பூசி மகிழ்ந்தால் தீவினைகள் நீங்கும். மோட்ச இன்பம் அடைய வழி உண்டாகும். இறைவனது அழகிய திருவடிகளை அடையலாம்.

(அ - சொ) கங்காளன் - எலும்பு மால்ைகளை அணிந்த இறைவன். கவசம் - உடலுக்குத் துன்புருது அணியும் மேல் உடை. மங்காமல் - தடையில்லாமல். வினை - பாவ ம் , சிவகதி - மோட்சம். சிங்காரம் - அழகு. திருவடி - மெய்ஞ் ஞானம். -

(விளக்கம்) நாமும் பூசவேண்டும் என்ற கருணையினல் தான் இறைவன் தன் திருமேனியில் விபூதியைப் பூசிக் கொள்கிருன். திருநீறு பொது. வைணவர்கள், கிறித்தவர்கள். முஸ்லீம்களும் பூசிக் கொள்ளலாம். கிறித்தவர் சாம்பல் திருநாளில் பூசிக் கொள்கின்றனர். முஸ்லீம்கள் அல்லாசாமிப் பண்டிகைகளில் திருநீற்றைப் பூசுகிரு.ர்கள். திருமால்

மேனியில் திருநீறு இருப்பதை நம்மாழ்வார் கூறுகிருர்,

நல்ல குருவைக் கொள்ளமையால் கேடே வரும் 263. குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்

குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர் குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக் குருடும் குருடும் குழிவிழும் ஆறே.