பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304

364

(விளக்கம்) நீரையும், மலரையும் கொண்டு இறைவனைப் பூசிக்கும் பேறு புண்ணியம் வாய்க்கப் பெற்றவர்க்கே அமையும். ஆதலின், புண்ணியம் செய்வார்க்கு என்றனர். நண்ணல் என்பது நண் என நின்றது.

அடியார்க்கு உதவிஞல் அஃது ஆண்டவனுக்கு

உதவியதாகும்

275. படமாடக் கோயில் பகவற்கொன் நீயில்

நடமாடக் கோயில் கம்பர்க்கங்காகா நடமாடக் கோயில் கம்பர்க்கொன் lயில் படமாடக் கோயில் பகவற்க தாமே.

(இ - ள்) சித்திரங்களும் ஒவியங்களும் அமைந்த மாடங்களையுடைய கோயிலில் இருக்கும் இறைவனுக்கு நாம் ஒரு பொருளைக் காணிக்கையாகச் செய்தால், அது நடமாடும் உடம்பாகிய கட்டிடத்தில் வாழும் இறைவ னுக்கு ஒப்பான அடியார்களேச் சாராது. ஆனால் நடமாடும் அடியார்கட்கு நாம் ஒன்று கொடுத்தால், அது படம் ஆடும் மாடக் கோயிலில் இருக்கும் இறைவனைச் சாரும்.

(அ - சொ) நம்பர் - அடியார். படம் - சித்திரப் படங்கள்.

(விளக்கம்) ஆண்டவனுக்கு ஈவதை அடியார்கட்கு ஈந்தால் அஃது ஆண்டவனைச் சாரும்.

ஞானிக்கு உணவு அளிப்பதே சிறப்பு

276. அகரம் ஆயிரம் ஆரியர்க் கீயில்என் சிகரம் ஆயிரம் செய்து முடிக்கில்என் பகரும் ஞானி பகல்ஊண் பலத்துக்கு நிகரிலே என்பது கிச்சயம் தானே.