பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

307

30%

ஞானியின் உடலை எரித்தலால் வரும் கேடு

279. எண்ணிலா ஞானி உடல்எரி தாவிடில்

அண்ணல்தம் கோயில் அழல் இட்ட தாங்கொக்கும் மண்ணில் மழைவிழா வையகம் பஞ்சமாம் எண்ணரும் மன்னர் இழப்பார் அரசுமே.

(இ- ள்) நம்மால் இந்த அளவுக்குப் பெருமை உண்டு என்று எண்ணமுடியாத, அவ்வளவு சிறப்பு வாய்ந்த ஞானி யின் உடம்பின்மீது நெருப்புப் பரவுமானல், பெருமையில் சிறந்த இறைவன் திருக்கோயிலேக் கொளுத்தியதற்கு ஒப்பாகும். நாட்டில் மழை பெய்யாது. உலகம் பஞ்சத்தால் வாடும். பல அரசர்கள் தம் அரசை இழந்து விடுவர்.

(அ . சொ) எரி - தீ. அண்ணல் - பெருமையில் சிறந்த இறைவன். அழல் - தீ. இட்டதாங்கு ஒக்கும் இட்டது போல இருக்கும். வையகம் - உலகம்.

(விளக்கம்) ஞானியின் பெருமையை நம்மால் சிந்தித்து அறிய முடியாமையின், எண்ணிலா ஞானி என்றனர்.

ஞானியின் உடலைப் புதைத்தல் வேண்டும்

280. புண்ணியம் ஆம்அவர் தம்மைப் புதைப்பது

கண்ணி அனல்நோக்கின் காட்டில் அழிவாகும் மண்ணில் அழியில் அலங்கார பங்கமாம் மண்ணுல கெல்லாம் மயங்கும்.அனல் மண்டியே.

(இ. ள்) ஞானிகளின் உடலங்களைச் சமாதி செய்து புதைப்பதுதான் புண்ணியமாகும். அவர்கள் உடம்புகள் தீயினைப் பொருந்தில்ை நாட்டிற்கு அழிவு ஏற்படும். அவர்கள் உடல்களைச் சமாதி செய்யாமல், அப்படியே