பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

311

3.11

அமைப்பினும் சரியே. நவமணிகளை இடுதலே சாலச்சிறப்பு. ஒன்பது வணிகளாவன. கோமேதகம், நீலம், பவளம், புட்பராகம் மரகதம், மாணிக்கம், முத்து, வைடூரியம், வைரம் என்பன.

மேலும் சமாதிக் குழிக்குச் செய்ய வேண்டுவன 285. கள்குகை கால்வட்டம் படுத்ததன் மேல்சாரக்

கள்ளவிழ்த் தாமம் களபம்கத் தூரியும் தெள்ளிய சாந்து புழுகுபன் ரீர்சேர்த்து ஒள்ளிய கல்தூபம் உவந்திடு வீரே. (இ - ள்) சமாதிக் குழியின் நடுவே, நான்கு வட்டம் செய்து, அவற்றின் மீது தேன் சொரியும் மலர்மாலை, சந்தனக் கலவை, கத்துாரி தெளித்த சந்தனம், புனுகு, பன்னீர் இவற்றைத் தக்கவாறு நிரப்புதல் வேண்டும். ஒளி யுடைய நல்ல மணப்புகை விருப்பத்துடன் காட்டுதல் வேண்டும். -

(அ - சொ) நள் - நடு. குகை - சமாதிக்குழி. நால் வட்டம் - நான்கு வட்டங்கள். கள் . தேன். அவிழ் - சொரியும். தாமம் - மலர்மாலை. களபம் - சந்தனக் கலவை. சாந்து - குழம்புச் சந்தனம். ஒள்ளிய - ஒளியுடைய. உவந்து- மகிழ்ந்து. துரபம் - சாம்பிராணிப் புகை.

(விளக்கம்) களபம் கட்டிச்சந்தனத்தையும், சாந்து நீர்ச் சந்தனத்தையும் ஈண்டு உணர்த்துகின்றன. புழுகு என்பது புனுகுப் பூனையினின்று கிடைக்கும் வாசனைப் பொருள். கஸ்தூரி மான் வயிற்றினின்றும் கிடைப்பது.

சமாதிக்கு முன் இடும் படையல் 286. விரித்தபின் குல்சாரும் மேவுதல் செய்து பொரித்த கறிபோ னகம்இள நீரும் குருத்தலம் வைத்தோர் குழைமுகப் பார்வை தரித்தபின மேல்வட்டம் சாத்திடு வீரே.