பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

312

312

(இ - ள்) சமாதியினை ஒழுங்காக விரிவு செய்த பிறகு, ஞானியின் சமாதிமுன் மணை வைத்து, அதன்மேல் வாழை இலை இட்டு, அதில் பொறித்த கறிவகைகளையும் சோற்றை யும் இளநீரையும் படைத்து, அச்சமாதியின் முன்பு பக்தி யுடன் ஞானி நம்மிடையே இல்லையேக் என்ற குறிப்பில் முகம் உருகிய தோற்றத்தோடு பணிந்து, சமாதிக்கு மேல் நிலைகளைக் கட்டுவீர்களாக

(அ-சொ) விரித்த-அமைத்த, பொருந்துதல் செய்து. போனகம்-சோற்று ) குருவின்முன், குழை, முகம் - வாடிய முகம். மேல்வட்டம். சமாதிக்கு மேல் கட்ட வேண்டியவை

(விளக்கம்). படையலைப் படைப்பதற்காக அமைக்கப்பட வேண்டிய மணையை ஈண்டு சாரும் மேவுதல் செய்து என்றனர். சமாதி திருமுன் நின்று, குரு மறைந்தனரே என்ற வருத்தத் தால் முகம் வாடும் நிலையினை குழைமுகப்பார்வை என்றனர். மேல் வட்டம் சாத்துதலாவது கோவியாக அமைத்தல் முதலியன.

சமாதிப் பூசை 287. ஆதனம் மீதில் அரசு சிவலிங்கம்

போதும் இரண்டினில் ஒன்றைத்தா பித்து மேதகு சந்நிதி மேவுத் தரம்பூர்வம் காதலில் சோடசம் காண்பது சாரமே. (இ) - ள்) சமாதியின் மேலே அரசமரக் கிளை சிவ லிங்கம், ஆகிய இரண்டனுள் தகுதி வாய்ந்த ஒன்றைத் தாபித்தல் வேண்டும். சமாதியின் சந்நிதி வடக்காக வேனும் கிழக்காகவேனும் இருக்கும்படி அமைக்க வேண்டும். காலா காலங்களில் பதினறுவகைச் சிறப்புடன் பூசனை செய்ய வேண்டும்.

(அ - சொ) ஆதனம் - சமாதியின் மேல்பாகம். அரசு - அரச மரக் கிளை. போதும் தகுதியானது. தாபித்து