பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

314

粤重叠

நல்ல பிள்ளைப் பேற்றைப் பெறலாம். நீண்ட நாட்கள் நோய் நொடி இனறி இருக்கலாம். ஆயுளையும் பெருக்கலாம்.

ஐம்பெரும் பூதங்களால் அமைந்ததே உடம்பு

289. உரம்.அடி மேதினி உந்தியில் அப்பாம்

விரவிய தன்முலை மேவியகீழ் அங்கி கருமுலை மீமிசை கைக்கீழில் காலாம் விரவிய கந்தரம் மேல்வெளி ஆமே. (இ- ள்) உடம்பைத் தாங்கும் பாதங்கள் மன் ஆகும். பாதம் முதல் கொப்பூழ் வரை நீர் ஆகும். கொப்பூழிலிருந்து மார்பு வரை பொருந்தியது தீயாகும். மார்பிலிருந்து தோள்வரை காற்ருகும். கழுத்துக்கு மேலே ஆகாயமாம்,

(அ - சொ) உரம் - வன்மை. மேதினி - நிலம்: மண். உந்தி - கொப்பூழ், தொப்புள். முலை - மார்பு. அங்கி - நெருப்பு. மிசை - மேலே. கால் - காற்று. கந்தரம் - கழுத்து, விரவிய உடம்பில் கலந்துள்ள. வெளி ஆகாயம்.

(விளக்கம்) உலகம் மண், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்து பொருள்களால் ஆனது. அதுபோல உடலங் களும் ஐம்பெரும் பூதங்களால் ஆனவை. முலை, ஈண்டு மார்பை உணர்த்தி நிற்கின்றது.

சீவனின் நுண்மை 290, மேவிய சீவன் வடிவது சொல்லிடில்

கோவின் மயிர்ஒன்று நூறுடன் கூறிட்டு மேவிய கூறது ஆயிரம் ஆயினுல் ஆவயின் கூறுநூ ருயிரத் தொன்றே. (இ - ள்) உடலில் பொருந்தியுள்ள சீவனின் வடிவைச் சொல்லப்போனல், பசுவின் மயிர் ஒன்றை எடுத்து, அதனை